என் மலர்
உள்ளூர் செய்திகள்

உற்சவம் நடைபெற்ற போது எடுத்தப்படம்
வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தீர்த்த உற்சவம்
வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.
பல்வேறு சிறப்புடைய இக்கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 17 ந் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அம்மன் வீதியுலா ஆகியன நடைபெற்றுவந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தொடர்ந்து தீர்த உற்சவம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலை முதல் உறவின் முறைகாரர்கள் மீது மஞ்சள் நீர் ஊற்றி விளையாடினர். தொடர்ந்து,
கோவிலில் அம்மனுக்கு மஞ்சள் நீரால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், அம்மனை வாகனத்தில் எழுந்தருளச் செய்து, தேரோடும் 4 வீதிகள் வழியே பக்தர்கள் வாகனத்தை இழுத்து வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மீது மஞ்சள் தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வடகாடு போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
Next Story






