என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.
    X
    சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    சிறப்பு கிராமசபை கூட்டம்

    சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் வாராப்பூர் சமுதாயக் கூடத்தில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஐ.மலர்விழிநாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    இதில்  ஒன்றிய பற்றாளராக. ஒன்றிய மேற்பார்வையாளர் பெரியய்யா முன்னிலை வகித்தார்.  இக் கூட்டத்தில் வேளாண்மைத் துறை, கல்வித்துறை, வனத்துறை, சுகாதாரத்துதுறை,  ஊரக உள்ளாட்சி துறை, அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண்பதாக உறுதி கூறினார்கள்.

    மேலும் வருங்காலத்தில் வாராப்பூர் ஊராட்சியில் எல்லோருக்கும் குடிநீர், மருத்துவ பாதுகாப்பு,  சிறந்த கட்டமைப்பு வசதிகள் அடைந்தே தீர்வது என்று கிராம சபை மூலமாக தீர்மானம் ஏற்றப்பட்டது.

    இதில் ஊராட்சியின் துணைத் தலைவர் எஸ்.சித்ரா, வார்டு உறுப்பினர்கள் பொன்னையா, பழனியாயி, மகாலட்சுமி, பழனிச்சாமி, அறுவுகம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும் இக்கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி உறையாற்றினார்.
    Next Story
    ×