என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    இல்லம் தேடி கல்வி மையம் ஆய்வு நடைபெற்றது.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  ஆலோசனையின் படியும், முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி வழிகாட்டுதலின் படியும்  திருவரங்குளம் ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் சசிகுமார் மற்றும் சையது இப்ராம்சா ஆகியோர் மாங்காடு வாணியர்தெரு,

    புள்ளான்விடுதி, ஆலங்காடு ஆகிய இடங்களில் உள்ள 7 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் பார்வையிடப்பட்டனர். அப்போது ன்னார்வலர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அட்டவணைப்படி பாடங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். தமிழ் மற்றும்

    ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி, எளிய கணிதச் செயல்பாடுக ள் மற்றும் ஆடல், பாடல் கதையுடன் கற்பித்தல் செயல்பாடுகள்  சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்ததை பார்த்து, தன்னார்வலர்களின் செயல்பாடுகளை அதிகாரிகள் பாராட்டி சென்றனர்.
    பட்டமரத்தான் கோவிலில் லட்ச அர்ச்சனை நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி பட்டமரத்தான் கோவிலில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு முதல் நாளான்று லட்ச அர்ச்சனை நடைபெறும். நிகழாண்டு லட்ச அர்ச்சனை இன்று அதி காலை 5.00 மணிக்கு பட்டமரத்தான் கோயில் லட்ச அர்ச்சனை தொடங்கியது.

    இதில் பரணி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் பங்கேற்று வேத மந்திரங்க முழங்க லட்ச அர்ச்சனை நடைபெற்றது.முன்னதாக பட்டமரத்தான் சாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.


    விழாவில் பொன்னமராவதி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று பட்டமரத்தான் சாமியை வழிபட்டனர்.பக்தர்கள் அனைவருக்கும் எஸ்.டி.கே.ஆர் குடும்பத்தார்கள்   அன்னதானம் வழங்கினர்.
    நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:
                                                               
    புதுக்கோட்டை மாவட்ட நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    தமிழ்நாட்டில் நகர்புறங்க ளில் உள்ள குடிசைவாசிகள் மற்றும் நகர்புற ஏழைகள் வாழ்க்கை நிலைமையை வசதி செய்தல் மற்றும் சாத்தியமான சூழலை உருவாக்குதல், மாநில அளவில் கொள்கை உருவா க்கும் செயல்பாட்டில் ஒருங்கி ணைப்பை மேம்படுத்துதல்,

    துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி இணைப்புச் சாலை, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை உருவா க்குதல் போன்றவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    பிற சமூகத்துறைகளுடன் ஒருங்கிணைப்பின் மூலம் நகர்புற ஏழைகள், நகர்புற குடிசை வாசிகளுக்கு நலத்தி ட்டங்கள் சென்றடைதல், நியாயவிலைக்கடை, காவல்நிலையம், நூலகம், ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவை உருவாக்குதல், நகர்புற ஏழைகள் மற்றும் சுகாதாரமற்ற குடியிருப்பு களில் வாழும் மக்களின் பொதுக்கு றைபாடுகளான தெருக்களில் குப்பை தொட்டி அமைத்தல், கழிவுநீர் கால்வாய் பிரச்சனைகளை நிவர்த்தி செய்தல்,

    குடியிருப்புகளில் மகளி ர்சுய உதவிக்குழுக்களை உருவாக்குதல், வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளித்தல், இசேவை மையம், ஆவின் நிலையம், செல்போன் டவர்கள் அமைத்தல் போன்றவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
     புதுக்கோட்டை மாவட்ட நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற ேபாது எடுத்தப்படம்.
    வேலை செய்யும் போது கட்டிடத்திலிருந்து விழுந்த பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலக்கோட்டையைசேர்ந்த பழனிவேல் மனைவி மாரிக்கண்ணு என்கின்ற ஆனந்தி (வயது 35 ). கட்டிட தொழிலாளியான இவர், சம்பவத்தன்று ஆலங்குடி பள்ளிவாசல் தெருவில் உள்ள தனியார் காம்ளக்ஸ் 5வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி கீழே விழுந்தார்.

     இதனை பார்த்த மற்ற பணியாளர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

     புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசமரம் அருகில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆலங்குடி காவல் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


    அப்போது மது விற்பனை செய்து கொண்டிருந்த மேலகரும்பிரான்கோட்டையை சேர்ந்த வடிவேல் (வயது 50), கம்பர் தெருவைசேர்ந்த ராஜேந்திரன் ( 52) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர்களை  காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முதலாவது காலாண்டு குழுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
     
    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட அளவில் 2022-23 ஆம் ஆண்டிற்கான முதலாவது காலாண்டு குழுக்கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் நலக்குழு உறுப்பினர்களிடம் கோரிக்கை பெறப்பட்டது.  

    தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக 2022-23 ஆம் ஆண்டிற்கான முதலாவது காலாண்டு மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்  நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் சட்ட செயல்பாடுகள் குறித்தும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான தீருதவி மற்றும் புனர்வாழ்வு குறித்தும், உண்மைக்கு புறம்பான வழக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதந்திர கூட்டம் நடை பெற்றது.
    புதுக்கோட்டை:
     

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு மாதந்திரக் கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு தலைவர்  கார்த்திக்கேயன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கலந்து கொண்டு தங்கள் பகுதி குறைநிறைகளை எடுத்துரைத்தனர்.

    அதனையடுத்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிலைமைகளை எடுத்து கூறி,    இன்னும் ஓரிரு வாரங்களில் நிலைமை  சரி செய்யப்படும் என உறுதியளித்தனர்.  

    இதற்கிடையில் அனைத்துத்துறை அதிகாரிகளும் வந்திருக்கையில் மக்கள் நலனில் முக்கியமான துறையான சுகாதாரத்துறை  அதிகாரிகள் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை யென கூட்டத்தின்  வாயிலாக கேள்வியெழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்த ஒன்றியக்குழு தலைவர்  கார்த்திக்கேயன் இனி வரும் கூட்டங்களில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்துகொள்ளவில்லை யெனில், மாவட்ட நிர்வாகம் மற்றும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல குழு முடிவெடுக்கும் என தெரிவித்தார்.
    அறந்தாங்கியில் மாட்டுவண்டி எல்லை பந்தய போட்டி நடை பெற்றது.
    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வைரிவயல் ஸ்ரீ வீரமுனி ஆண்டவர் திருக்கோயில் சந்தனகாப்பு உற்சவத்தை முன்னிட்டு 82 -ம் ஆண்டு மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்லை பந்தையம் நடைபெற்றது.

    வைரிவயல் ஸ்ரீ வீரமுனி ஆண்டவருக்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சந்தனக்காப்பு அலங்காரமும் அதனை யொட்டி அன்று காலை கோவிலில்இருந்து மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடைபெறுவது வழக்கம்.

    82 -ம் ஆண்டாக நேற்று  நடைபெற்ற மாட்டு வண்டி,குதிரை வண்டி பந்தயத்தில்     சென்னை, கோவை,ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை தஞ்சாவூர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறுபகுதி யிலிருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் மற்றும் குதிரைகள் போட்டியில் கலந்துகொண்டன.

    போட்டியில் பெரிய மாடு, கரிச்சான்மாடு, கரிச்சான்குதிரை, பூஞ்சிட்டு குதிரை என நான்குபிரிவு களாக நடைபெற்ற போட்டியில் பெரியமாடு பிரிவில் 11 ஜோடிகளும்,

    கரிச்சான் மாடு பிரிவில் 18 ஜோடிகளும், கரிச்சான்குதிரை பிரிவில் 28 குதிரையும், பூஞ்சிட்டு குதிரையில் 20ம் மொத்தம்  29 மாட்டு வண்டிகளும், 48 குதிரைகளும் கலந்து கொண்டன.

    போட்டியில் கலந்து கொண்ட மாட்டுவண்டி மற்றும்  குதிரை வண்டிகள் நிர்ணயிக்கப்பட்ட பந்தைய இலக்கை நோக்கி ஒன்றையொன்று முந்தி சீறிப்பாய்ந்தன.

    போட்டியில் கலந்துகொண்ட  வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டி உரிமை யாளர்களுக்கு மொத்தம்  5 லட்சம் ரூபாய் ரொக்க ப்பரிசும், சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு பரிசுத்தொகையுடன் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    வீரமுனி ஆண்டவர் திருக்கோயில் பந்தய நிகழ்ச்சியினை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்திருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் நின்று பந்தையத்தை கண்டு ரசித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை  மாவட்ட  கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    புதுக்கோட்டை மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் 79 கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பதவிகள் நிரப்பிட பெறப்பட்ட விண்ணப்பங்களின்  

    அடிப்படையில் 20.04.2022 முதல் 30.04.2022 (24.04.2022 ஞாயிறு நீங்கலாக) முடிய உள்ள காலதத்திற்குள் நேர்காணலை அரசு நியமன விதிமுறைகளின்படி தேர்வு செய்ய நேர்காணல் 20.04.2022 முதல் 27.04.2022 முடிய நடைபெற்று வந்தது.

    அனைத்து நடவடிக்கை களையும், நிர்வாக கார ணங்களால் கால்நடைப் பராமரிப்பு உதவியாளர்கள் நேர்காணல் உடன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே  ஏனாதி கிராமத்தில் உள்ள 100 ஏக்கர் கொண்ட பெரியகண்மாயில் மீன்பிடி திருவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.  அதிக பாசன  நீர் நிலைகளை கொண்ட புதுக்கோட்டை மாவட்டம் என்பதும்

    அந்நீர்நிலைகளில் மீன்களை வளர்ப்பதும் நீர் வற்றியதும் அதனை பொதுமக்கள் பிடிப்பது என்பதுதான் மீன்பிடி திருவிழா என்பது அனைவரும் அறிந்தது. பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  நெல் அறுவடைக்கு பின்னர்  கண்மாய் வற்றும் சூழலில் உள்ள பாசன‌கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    ஜாதி, மதம் பாராமல் அனைவரும்  ஒன்று கூடி  நடைபெறும் மீன்படி திருவிழா  இன்று ஏனாதி கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான பெரிய கண்மாயில் கோலகலமா நடைபெற்றது.

    300க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில்  ஊத்தா, வலை, பரி,கச்சா, தூரி ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களைபிடித்தனர்.

    கார் மோதியதில் முதியவர் பலியானார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள ராசியமங்க ளத்தைச் சேர்ந்தவர் அய்யாத்துரை( வயது 72). இவர், வடகாடு சென்று விட்டு மீண்டும் சைக்கிளில் ராசியமங்களத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பட்டுக்கோட்டை சாலை கீழாத்தூர் அருகே வந்த போது, எதிரே வந்த கார் ஒன்று, இவர் மீது மோதியது. இதில்  பலத்த காயமடைந்த அய்யாதுரை சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து வடகாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    மது எடுப்பு விழா நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் ஏழுபிள்ளை காளியம்மன், கண்ணக்காரன், பெரிய பிச்சையம்மாள் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை பக்தர்கள் காவடி, பால்குடம் எத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்துநேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இயைடுத்து புதுக்கோட்டை விடுதி, கும்மங்குளம், ஆயிப்பட்டி, நெம்மக்கோட்டை, பூவை மாநகர், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த ஆண்கள் பலர் கலந்து கொண்டு தென்னம்பாளை மற்றும் பூக்களை வைத்து அலங்கரிக்கப்பட்ட குடத்தில் மது எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். 

    பின்னர் மது குடங்களில் உள்ள பூக்களை அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு செலுத்தி வழிபட்டனர். விழாவிற்கான ஏற்படுகளை கிராமமக்கள் மற்றும் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    ×