search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்ற போது எடுத்தப்படம்.
    X
    பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    பொன்னமராவதியில் மீன்பிடி திருவிழா

    பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே  ஏனாதி கிராமத்தில் உள்ள 100 ஏக்கர் கொண்ட பெரியகண்மாயில் மீன்பிடி திருவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.  அதிக பாசன  நீர் நிலைகளை கொண்ட புதுக்கோட்டை மாவட்டம் என்பதும்

    அந்நீர்நிலைகளில் மீன்களை வளர்ப்பதும் நீர் வற்றியதும் அதனை பொதுமக்கள் பிடிப்பது என்பதுதான் மீன்பிடி திருவிழா என்பது அனைவரும் அறிந்தது. பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  நெல் அறுவடைக்கு பின்னர்  கண்மாய் வற்றும் சூழலில் உள்ள பாசன‌கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    ஜாதி, மதம் பாராமல் அனைவரும்  ஒன்று கூடி  நடைபெறும் மீன்படி திருவிழா  இன்று ஏனாதி கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான பெரிய கண்மாயில் கோலகலமா நடைபெற்றது.

    300க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில்  ஊத்தா, வலை, பரி,கச்சா, தூரி ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களைபிடித்தனர்.

    Next Story
    ×