என் மலர்
புதுக்கோட்டை
3-ம் வகுப்பு மாணவனின் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட் டம், ஆலங்குடி அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் இனியவன் (வயது 8). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.
மாணவர் வீடு அன்னதான காவேரி கால்வாய் கரைக்கு தென்பக்கம் இருப்பதால் கரை சீரமைக்கப்பட்ட நிலையில் கால்வாய்க்குள் இறங்கி ஏறி பள்ளிக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாக கூறி கடந்த மாதம் பள்ளிக்கு விடுப்பு கேட்டு விண்ணப்பம் செய்திருந்தான்.
அதேபோல அவனதுபெற்றோரும் சாலை வசதி கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்திருந்தனர். ஆனால் இதுவரை சாலை வசதி கிடைக்காத நிலையில் நேற்று காலை மாணவன் இனியவன் மற்றும் அவரது குடும்பத் தினர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாகியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் அதே பகுதியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட அடிக்கல் நாட் டு விழாவில் கலந்து கொண்டு சென்றபோது சாலையில் மாணவன் தன து குடும்பத்தினருடன் பதாகையுடன் அமர்ந்திருப்பதை பார்த்த அமைச்சர் மெய்யநாதன் அவர்களின் கோரிக்கையை கேட்டார்.
கால்வாய் சீரமைக் கப்பட்டதால் வீட்டிற்கு செல்ல பாதை இல்லை. அதனால் மாணவன் பள் ளிக்கு செல்ல முடியவில்லை, விவசாய விளை பொருட்சுளையும் வெளியில் கொண்டு வர முடியவில்லை.
பலமுறை மனு கொடுத்தும் பயணில்லை என்றனர். உடனே அருகில் நி ன்ற வரு வாய்த்துறை அதிகாரிகளை அழைத்து தனி நபர் பட்டா நிலம் இ ல்லாமல் அரசு பொது நிலமாக இருந்தால் உடனே பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அப்போது ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி அன்னதான காவேரி கால்வாய் அளவீடு செய்யப்பட உள்ளது. அளவீடு செய்த பிறகு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்ததையடுத்து மாணவன் குடும்பத்தினர் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரப்பு ஏற்பட்டது.
கந்தர்வகோட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை :
கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் 29 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த தடுப்பூசி முகாம்களில் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணையாக பெரியவர்கள் இளைஞர்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
தடுப்பூசி முகாமை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக் மழவராயர்,
ஆணையர்கள் காமராஜ், திலகவதி, வட்டாட்சியர் புவியரசன், மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

வாராப்பூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் மலர்விழி நாகராஜன் தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 2021 முதல் 2022 வரை ஆண்டுகளின் வரவு செலவு கணக்கு பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதனை பிரதி எடுத்து அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் விவாதிக்கப்பட்டு கிராமசபை மூலம் அங்கீகாரம் செய்யப்பட்டது.
இதில் ஒன்றிய அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும் கூட்டத்தில் துணைத் தலைவர் எஸ்சி.த்ரா மற்றும் வார்டு உறுப்பினர்கள் மகாலட்சுமி, ஆறுமுகம், பழனிச்சாமி, பொன்னையா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கோவில் திருவிழாவையொட்டி மாநில அளவிலான பெண்கள் கபாடி போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கட்டுமாவடி காந்தி நகரில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
விழாவினையொட்டி பெண்களுக்கான மின்னொளி கபாடி போட்டி நடைபெறும். தொடர்ந்து 10-வது ஆண்டாக நடைபெற்ற கபாடி போட்டியில் சேலம், கோவை, திருநெல்வேலி, நாமக்கல், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 அணிகள் பங்கேற்றன.
16 அணிகளுக்கு லீக் அடிப்படையில் 4 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் வீராங்கனைகள் தங்கள் அபாரத்திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதலிடத்தை பிடித்த திருநெல்வேலி பாரதி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினருக்கு 30 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
மேலும் 2 மற்றும் 3வது இடத்தை பிடித்த கோவை சிவக்குமார்ஸ்போ ர்ட்ஸ் க்ளப், சேலம் ஏவிஎஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப் ஆகிய அணியினருக்கு முறையே 20 மற்றும் 10 ஆயிரம் ரொக்கப்பணமும் கோப்பைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறப்பாக அமைக்கப்பட்ட மின்னொளி கலையரங்கைச் சுற்றிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பெண்கள் கபாடி போட்டியை கண்டு ரசித்தனர். காவல்த்துறையினர் 30க்கும் மேற்ப்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வடக்கு அம்மாபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிமேலாண்மைக்குழு மறுசீரமைப்பு கூட்டம் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு புதிய தலைவராக கலையரசி மற்றும் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் சாய்லெட்சுமி வரவேற்ப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் இடைநிலை ஆசிரியர் மணிமாலா, ஆசிரியர் பாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் லங்குடி அருகே மேலநெம்மகோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). டிரைவர்.
இவரது மனைவி மாரியம்மாள் (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக மாரியம்மாள் தனது கணவரை பிரிந்து பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் கூறி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்தபோது கணவர் மணிகண்டன் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாரியம்மாள் இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பொன்னமராவதி வலையபட்டியில் நகரத்தார் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி புதுப்பட்டி தனியார் மண்டபத்தில் வலையபட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில் வலையபட்டியில் ஒரு வேடந்தாங்கல் எனும் இரண்டுநாள் சந்திப்பு விழா நடைபெற்றது.
விழாவில் வலையபட்டி மலையாண்டிகோயில் சுற்றுப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்எம்.கதிரேசன், பங்கேற்று பேசினார்.
வலையபட்டி காணொளி தொகுப்பினை ராமநாதன், விழா மலரினை முருகப்பன், லேணா குழுவினர் ஆகியோர் வெளியிட்டனர்.
வெற்றியாளர்கள் விட்டொளித்த ஐந்து பழக்கங்கள் எனும் தலைப்பில் ராம்குமார் சிங்காரம், செட்டிநாட்டு பாரம்பரியம் குறித்து மீனாட்சிசுந்தரம் ஆகியோர் பேசினர். மாற்றம் ஒன்றே மாறாதது எனும் தலைப்பில் மருத்துவர் தி.பழனியப்பன் பேசினார்.
குடும்ப வாழ்க்கை பற்றிய கலந்துரையாடல் நிகழ்வில் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் பங்கேற்று பேசினார்.
விழாவில் நிர்வாகிகள் சே.முத்து பழ.கு.பழனியப்பன், அம்பாள் சரவணன், நடராஜன், உமா மெய்யப்பன், பேரூராட்சித்தலைவர் சுந்தரி அழகப்பன், செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி கிராமத்தில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோ விலில் ஆண்டுதோறும் சித்திரை மாததிருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம்.
இதைப்போல் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது. போட்டியை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா ஜல்லிக்கட்டு உறுதி மொழியை வாசிக்க வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி மற்றும் ஆலங்குடி டிஎஸ்பி வடி வேல் இன்ஸ்பெக்டர்அழகம்மை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஜல்லிக்கட்டிற்கு புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல்,தேனி சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ங்களிலி ருந்து காளைகள் வந்திருந்தன.
களத்தில் 850 காளைகள் 400 மாடுபிடி வீர ர்கள் உள்ளனர். காளை களை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், பிடி படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், மின்விசிறி எவர் சில்வர் கட்டில், பேன்,பிரிட்ஜ்,பாத்திரங்கள்,உட்பட பல்வேறு பரிசு பொரு ட்கள் வழங்கி வருகின்றனர்.
ஆலங்குடி டிஎஸ்பிவடி வேல் தலைமையில் ஆல ங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுஉள்ள னர். விழாவில் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் சுற்று வட்டாரகிராமபொது மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர்.

குடிநீர் லாரிகளை திரும்ப திரும்ப புதுப்பிப்பதுடன் புதியதாக வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வலிறுத்தினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் திலகவதிசெந்தில் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் லியாகத்அலி, ஆணையர் நாகராஜன், பொறியாளர் சேகரன், மற்றும் அதிகாரிகள் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர். நகர்மன்ற தலைவர் திலகவதிசெந்தில் தலைமையுரையில் நகரில் குடிநீர்பிரச்சினை அனைத்து பகுதிகளிலும் உள்ளது. வருகின்ற குடிநீரை பகிர்ந்து அனைவருக்கும் கிடைக்கம்படி செய்து வருகிறோம்.
அதேபோல் தோரனை வாய்கால்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா தனது வளர்ச்சி பணிநிதியிலிருந்து குப்பைகளை அள்ள 25 பேட்டரி கார்களையும், 50லட்சம் சார்பில் சமூக பூங்கா அமைக்க ரூ.50 லட்சமும் ஒதுக்கீடு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போல் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுகரசர் 25 பேட்டரி கார்கள் வழங்கவும் புதுக்கோட்டையில் ரயில்வே கிராசில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று நோய் மீண்டும் வர தொடங்கியுள்ளது. ஆகையால் நகர்மன்ற உறுப்பினர்கள் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பின்னர் உறுப்பினர்கள் பேசியாதாவது, எஸ்ஏஎஸ்.சேட் என்கிற அப்துல்ரகுமான் பேசுகையில் நாய்களுக்கு குடும்ப கட்டுபாடு செய்ய நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே போல் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வாழ்வுகள் அமைக்க ரூ.25லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது எங்கு, எங்கு வாழ்வு அமைக்கப்படவுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார்.
விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான பர்வேஸ் பேசுகையில் தனது 4-வது வார்டுக்கு உட்பட்ட விஸ்வதாஸ்நகர் பகுதியில் தெருவிளக்குகள் இல்லை. அப்பகுதியில் விஷ சந்துகள் அதிகளவில் நடமாட்டம் உள்ளது. எனது வார்டு பகுதியில் 4000க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர்.
எனது வார்டு சட்டமன்ற தொகுதி போல் விரிந்து உள்ளது. மேலும் கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் எனது வார்டுக்கு தேவை எனவும், பாதாள சாக்கடை திட்டத்தை நல்லமுறையில் ஆராய்ந்து நடைமுறைபடுத்த வேண்டும் என்றார்.
உறுப்பினர் மூர்த்தி பேசுகையில் குடிநீர் லாரியை திரும்ப திரும்ப செலவு செய்து புதுபித்து வருவது வருவாய் இழப்பாகும். எம்பிகள் மூலம் புதிய குடிநீர் லாரியை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதே போல் மற்ற வார்டு உறுப்பினர்களும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். தஞ்சை மாவட்டத்தில் களிமேடு கிராமத்தில் தேர்திருவிழா போது உயிரிழந்தவர்களுக்கு நகர்மன்றத்தில் இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சத்துணவு ஊழியர்களுக்கு சமையல் போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை காவலர் சமுதாயக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சத்துணவு திட்டத்தின் சார்பில்; சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டியினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு துவக்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சத்துணவு திட்டத்தின் சார்பில் சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் புதுக்கோட்டை நகராட்சியை சேர்ந்த சமையலர்கள், உதவியாளர்கள் 28 பேர் கலந்து கொண்டனர். இதில் கவுணி அரிசி, முருக்கு, அதிரசம், வடை, சேமியா பாயாசம், முட்டை அவியல்,
எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், கீரை சாதம், புளி சாதம், மாவு உருண்டை வகைகள், கீரை சூப்பு வகைகள், இனிப்பு வகைகள் போன்ற உணவு வகைகள் போட்டியில் கலந்து கொண்டவர்களால் தயார் செய்யப்பட்டிருந்தது.
மாணவர்களுக்காக பள்ளிகளில் சத்துணவு தயார் செய்யும் சமையலர்கள், உதவியாளர்களின் பணிகளை ஊக்கப்படுத்தி பரிசுகள் வழங்குவதற்காக இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.
பட்டமரத்தான் கோவிலில் சித்திரை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பட்டமரத்தான் கோயிலில் சித்திரை திருவிழாவான பூச்சொரிதல் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும்.
அனைத்து கோவில்களிலும் ஒரு நாள் மட்டுமே பூச்சொரிதல் விழா நடைபெறும் ஆனால் இந்த பட்டமரத்தான் கோயிலில் மட்டும் ஒரு வாரத்திற்க்கு பூச்சொரிதல் விழா தொடர்ந்து நாடைபெறும்.
இது இக்கோயிலின் சிறப்பு, இரவு விழாக்குழு சார்பாக சிவன் கோயில் இருந்து பூத்தட்டு, பால்குடம் எடுத்து சென்று பக்தர்கள் வழிபட்டனர் அதேபோல நாட்டுக்கல் வீதி, இந்திராநகர், பாண்டிமான் கோவில் வீதி, அண்ணாநகர்,
பாலமேடு வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்களும் பொதுமக்களும் பூத்தட்டு, பால்குடம் போன்றவற்றை சாமிக்கு சார்த்தி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பட்டமரத்தான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கொடையாளர்கள் சார்பில் ஆங்காங்கே தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்டு நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பொன்னமராவதி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விக்னேஷ்வரபுரத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமில், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் தலைமை பொறுப்பு வகித்தார்.
முகாமில் கண் மருத்துவ பரிசோதனை, இசிஜி, ரத்ததானம், ரத்தப் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவம், பொதுமருத்துவம் மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழா ஆகியன நடைபெற்றது. இதில் பாக்குடி, விக்னேஷ்வரபுரம், பள்ளத்திவயல், பஞ்சாத்தி, ஆமாஞ்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முன்னதாக முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.