என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ஜல்லிகட்டு போட்டி நடை பெற்ற போது எடுத்த படம்.
    X
    ஜல்லிகட்டு போட்டி நடை பெற்ற போது எடுத்த படம்.

    முத்துமாரியம்மன் கோவிலில் ஜல்லிக்கட்டு போட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது.
    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி கிராமத்தில் ஸ்ரீமுத்துமாரியம்மன்  கோவில் உள்ளது. இக்கோ விலில்   ஆண்டுதோறும் சித்திரை  மாததிருவிழாவை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம்.

    இதைப்போல் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது. போட்டியை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

    புதுக்கோட்டை  வருவாய் கோட்டாட்சியர் அபிநயா ஜல்லிக்கட்டு உறுதி மொழியை வாசிக்க வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
    ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி மற்றும் ஆலங்குடி டிஎஸ்பி வடி வேல் இன்ஸ்பெக்டர்அழகம்மை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஜல்லிக்கட்டிற்கு  புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல்,தேனி சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ங்களிலி ருந்து காளைகள் வந்திருந்தன.

    களத்தில் 850 காளைகள் 400 மாடுபிடி வீர ர்கள் உள்ளனர். காளை களை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், பிடி படாத  காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், மின்விசிறி  எவர் சில்வர் கட்டில், பேன்,பிரிட்ஜ்,பாத்திரங்கள்,உட்பட பல்வேறு பரிசு பொரு ட்கள் வழங்கி  வருகின்றனர்.

    ஆலங்குடி டிஎஸ்பிவடி வேல் தலைமையில் ஆல ங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுஉள்ள னர். விழாவில் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் சுற்று வட்டாரகிராமபொது மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர்.
    Next Story
    ×