என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடை பெற்ற போது எடுத்த படம்.
பொன்னமராவதி வலையபட்டியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
பொன்னமராவதி வலையபட்டியில் நகரத்தார் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி புதுப்பட்டி தனியார் மண்டபத்தில் வலையபட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில் வலையபட்டியில் ஒரு வேடந்தாங்கல் எனும் இரண்டுநாள் சந்திப்பு விழா நடைபெற்றது.
விழாவில் வலையபட்டி மலையாண்டிகோயில் சுற்றுப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்எம்.கதிரேசன், பங்கேற்று பேசினார்.
வலையபட்டி காணொளி தொகுப்பினை ராமநாதன், விழா மலரினை முருகப்பன், லேணா குழுவினர் ஆகியோர் வெளியிட்டனர்.
வெற்றியாளர்கள் விட்டொளித்த ஐந்து பழக்கங்கள் எனும் தலைப்பில் ராம்குமார் சிங்காரம், செட்டிநாட்டு பாரம்பரியம் குறித்து மீனாட்சிசுந்தரம் ஆகியோர் பேசினர். மாற்றம் ஒன்றே மாறாதது எனும் தலைப்பில் மருத்துவர் தி.பழனியப்பன் பேசினார்.
குடும்ப வாழ்க்கை பற்றிய கலந்துரையாடல் நிகழ்வில் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் பங்கேற்று பேசினார்.
விழாவில் நிர்வாகிகள் சே.முத்து பழ.கு.பழனியப்பன், அம்பாள் சரவணன், நடராஜன், உமா மெய்யப்பன், பேரூராட்சித்தலைவர் சுந்தரி அழகப்பன், செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story