என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டமரத்தான் சாமிக்கு பால் குடம், பூதட்டு எடுத்துச்சென்று வழிபடும் பக்தர்கள்
பட்டமரத்தான் கோவிலில் சித்திரை பூச்சொரிதல் விழா
பட்டமரத்தான் கோவிலில் சித்திரை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பட்டமரத்தான் கோயிலில் சித்திரை திருவிழாவான பூச்சொரிதல் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும்.
அனைத்து கோவில்களிலும் ஒரு நாள் மட்டுமே பூச்சொரிதல் விழா நடைபெறும் ஆனால் இந்த பட்டமரத்தான் கோயிலில் மட்டும் ஒரு வாரத்திற்க்கு பூச்சொரிதல் விழா தொடர்ந்து நாடைபெறும்.
இது இக்கோயிலின் சிறப்பு, இரவு விழாக்குழு சார்பாக சிவன் கோயில் இருந்து பூத்தட்டு, பால்குடம் எடுத்து சென்று பக்தர்கள் வழிபட்டனர் அதேபோல நாட்டுக்கல் வீதி, இந்திராநகர், பாண்டிமான் கோவில் வீதி, அண்ணாநகர்,
பாலமேடு வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்களும் பொதுமக்களும் பூத்தட்டு, பால்குடம் போன்றவற்றை சாமிக்கு சார்த்தி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பட்டமரத்தான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கொடையாளர்கள் சார்பில் ஆங்காங்கே தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்டு நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பொன்னமராவதி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Next Story






