என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது

    கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விக்னேஷ்வரபுரத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது.  ஊராட்சி மன்றத்  தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமில், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் தலைமை பொறுப்பு வகித்தார்.

    முகாமில் கண் மருத்துவ பரிசோதனை, இசிஜி, ரத்ததானம், ரத்தப் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவம், பொதுமருத்துவம் மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழா ஆகியன நடைபெற்றது. இதில் பாக்குடி,  விக்னேஷ்வரபுரம், பள்ளத்திவயல், பஞ்சாத்தி, ஆமாஞ்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முன்னதாக முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
    Next Story
    ×