என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  புதுக்கோட்டை நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் திலகவதிசெந்தில் தலைமையில் நடைப்பெற்றது.
  X
  புதுக்கோட்டை நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் திலகவதிசெந்தில் தலைமையில் நடைப்பெற்றது.

  புதிய குடிநீர் லாரிகள் வாங்க கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடிநீர் லாரிகளை திரும்ப திரும்ப புதுப்பிப்பதுடன் புதியதாக வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வலிறுத்தினர்.
  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் திலகவதிசெந்தில் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் லியாகத்அலி, ஆணையர் நாகராஜன், பொறியாளர் சேகரன், மற்றும் அதிகாரிகள் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். 

  கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர். நகர்மன்ற தலைவர் திலகவதிசெந்தில் தலைமையுரையில் நகரில் குடிநீர்பிரச்சினை அனைத்து பகுதிகளிலும் உள்ளது. வருகின்ற குடிநீரை பகிர்ந்து அனைவருக்கும் கிடைக்கம்படி செய்து வருகிறோம். 

  அதேபோல் தோரனை வாய்கால்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா  தனது வளர்ச்சி பணிநிதியிலிருந்து குப்பைகளை அள்ள 25 பேட்டரி கார்களையும், 50லட்சம் சார்பில் சமூக பூங்கா அமைக்க ரூ.50 லட்சமும் ஒதுக்கீடு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

  அதே போல் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுகரசர் 25 பேட்டரி கார்கள் வழங்கவும் புதுக்கோட்டையில் ரயில்வே கிராசில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று நோய் மீண்டும் வர தொடங்கியுள்ளது. ஆகையால் நகர்மன்ற உறுப்பினர்கள் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

  பின்னர் உறுப்பினர்கள் பேசியாதாவது, எஸ்ஏஎஸ்.சேட் என்கிற அப்துல்ரகுமான் பேசுகையில் நாய்களுக்கு குடும்ப கட்டுபாடு செய்ய நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே போல் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வாழ்வுகள் அமைக்க ரூ.25லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது எங்கு, எங்கு வாழ்வு அமைக்கப்படவுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார். 

  விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான பர்வேஸ் பேசுகையில் தனது 4-வது வார்டுக்கு உட்பட்ட விஸ்வதாஸ்நகர் பகுதியில் தெருவிளக்குகள் இல்லை. அப்பகுதியில் விஷ சந்துகள் அதிகளவில் நடமாட்டம் உள்ளது.  எனது வார்டு பகுதியில் 4000க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். 

  எனது வார்டு சட்டமன்ற தொகுதி போல் விரிந்து உள்ளது. மேலும் கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் எனது வார்டுக்கு தேவை எனவும், பாதாள சாக்கடை திட்டத்தை நல்லமுறையில் ஆராய்ந்து நடைமுறைபடுத்த வேண்டும் என்றார். 

  உறுப்பினர் மூர்த்தி பேசுகையில் குடிநீர் லாரியை திரும்ப திரும்ப செலவு செய்து புதுபித்து வருவது வருவாய் இழப்பாகும். எம்பிகள் மூலம் புதிய குடிநீர் லாரியை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


  இதே போல் மற்ற வார்டு உறுப்பினர்களும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். தஞ்சை மாவட்டத்தில் களிமேடு கிராமத்தில் தேர்திருவிழா போது உயிரிழந்தவர்களுக்கு நகர்மன்றத்தில் இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

  Next Story
  ×