என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா முள்ளங்குறிச்சியில் கடந்த 17ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டி நடைபெற்ற போது பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் என 25 பேர் காயம் அ டைந்தனர். இதில் மழையூர் அருகே தீத்தானிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ரெங்கசாமி மகன் கணேசன் காளை முட்டியதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக கணேசன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story