என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவையை வழங்கிடவேண்டும்,
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும்.சரண் விடுப்பு ஒப்புவிப்பு உட்பட நிலுவை கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் துணை வட்டாட்சியர் செல்வராசு தலைமையில் ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
யோகேஸ்வரன் மாவட்ட துணைத்தலைவர் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ரவிக்குமார் மாவட்ட இணைச்செயலாளர் சாலை பணி யாளர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கருப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் சாலை பணியாளர் சங்கத்தின் வட்டத்தலைவ ர் வரவேற்புரை ஆற்றினார்.
ஆர்பாட்டத்தில் அதிகமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






