என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்
ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
காப்பீட்டு திட்ட குளறுபடிகளை களைய கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அனைத்துத் துறை ஓய்வூதிய சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில், துணைத் தலைவர் முத்தையா முன்னிலையில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்களால் செலவு செய்யப்பட்டநிலுவையில் உள்ள செலவின தொகையினை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக் கான கூடுதல் ஓய்வூதியம் வழங்குவதற்கான வயது வரம்பை 80 வயதிலிருந்து 70 வயதாக குறைக்க வேண்டும்.
சத்துணவு அங்கன்வாடி பணியாளர் உள்ளிட்ட பல்வேறு ஓய்வூதியர்களுக் கான குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 ஆக வழங்க வேண்டும்.
1.4.2003 தேதிக்கு பிறகு பணியில் அமர்த்தப்பட்ட அனைத்துத்துறை அரசு ஊழியர்களும் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கண்ணன், முண்டன், அருளாந்து, காமாட்டசி, ரங்கசாமி, ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






