என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவர் மயிலை குணமடையும் வரை கண்காணிப்பில் வைத்து பாதுகாக்க வேண்டும்
மின்கம்பத்தில் அடிப்பட்ட மயிலுக்கு சிகிச்சை
மின்கம்பத்தில் அடிப்பட்ட மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே மச்சுவாடி விஷ்வதாஸ் நகர் பகுதியில் குடிநீர் தேடி வந் த மயில் ஒன்று அங்குள்ள மின்கம்பத்தில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு, பறக்க முடியாமல் கிடந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள்வனத்துறையி னருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் வந்த வனச்சரக அலுவலர் சதாசிவம் அதனை மீட்டு, புதுக்கோட்டை அரசு தலைமை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
சிகிச்சைக்கு பிறகு கால்நடை மருத்துவர் மயிலை குணமடையும் வரை கண்காணிப்பில் வைத்து பாதுகாக்க வேண்டும் என வனச்சரக ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
Next Story






