என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    தடகளப்போட்டியில் கலந்து கொள்ள மாற்றத்திறனாளிகளுக்கு அழைப்பு

    தடகளப்போட்டியில் கலந்து கொள்ள மாற்றத்திறனாளிக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
    மாற்றுதிறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்ட அளவில் மாற்றுதிறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நாளை (20&ந் தேதி) காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது. 

    இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு  தங்களது திறமைகளை வெளிகொணர கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. 

    குறிப்பிட்ட பிரிவில் விளையாட கலந்து கொள்பவர்கள் ஒருவர் ஒரு விளையாட்டில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

    மாற்றுதிறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு  விளையாட்டுப் போட்டிகளுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுதிறன் கொண்ட மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தங்கள் விளையாட்டு திறனை வெளிபடுத்திட கேட்டுக் கொள்ளப்படுகின்றது. 

     போட்டிகளில் கலந்து கொள்வதற்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட  மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்று, மாவட்ட மறுவாழ்வு அலுவலர் வழங்கப்பட்ட சான்று அவசியம் கொண்டு வருதல் வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×