என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    புதுக்கோட்டையை மீண்டும் பாராளுமன்ற தொகுதியாக்க நடவடிக்கை

    புதுக்கோட்டையை மீண்டும் பாராளுமன்ற தொகுதியாக்க நடவடிக்கை எடுப்போம் என பா.ஜ.க.நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் புரட்சி கவிதாசன் சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செல்வம் அழகப்பன் ஆகியோர் கூட்டாக நற்சாந்துபட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தப்போது கூறியதாவது:-

    புதுக்கோட்டை பாராளு மன்ற தொகுதியை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை. திருமயத்தில் கேந்திரிய வித்யாலாயா பள்ளி . நமண சமுத்திரம் ரெயில்நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அறந்தாங்கி பொதுகூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியது கண்டிக்கத் தக்கது.

    மத்திய அமைச்ச ரையும், கவர்னரையும் ஒரு மையில் பேசியது கண்ட னத்துக்குரியது. விடுதலை சிறுத்தைகளை வைத்துக்கொண்டு பா.ஜ.க.வை மிரட்டி வருகிறது தி.மு.க. சமீபத்தில் அம்பேத்கர் பிறந்த நாளில் மாநிலம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் வேண்டு மென்றே தகராறு செய்துள்ளனர்.

    புதுக் கோட்டையில் விடு தலை சிறுத்தை கட்சியினர் தாக்கியதில் சந்தானலட்சுமி என்ற தொண்டர் காயமடைந்தார்.  அம்பேத்கர் அனைவருக்கும் பொதுவானவர். ஒரு கட்சி மட்டும் சொந்தம் கொண்டாடகூடாது. டாஸ்மாக் கடைகளை குறைப் போம் என கூறி விட்டு அதிகப்படுத்தி கொண்டே வருகின்றனர் தி.மு.க.வினர்.

    நற்சாந்துப்பட்டியில் முன்னோடியாக டாஸ்மாக் இல்லாத பகுதியாக மாற்றியுள்ளோம். நெல் கொள்முதலில் மூட்டை ஒன்றுக்கு ரூ.50 கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் 100 கோடி வரை ஊழல் நடைப்பெறுகிறது.

    மாநிலம் முழுவதும் தினந்தோறும் சேவாதினம் கொண்டாடப் படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1.65 லட்சம் ஏக்கர் தைலமர காடு களுக்கு பதிலாக மரகாடு களை உருவாக்க வேண்டும்.என்றனர்.

    பேட்டியின் போது ஜுவானந்தம், முரளி, திரைப்பட நடிகர் முருகானந் தம், இயக்குநர் எம்எஸ்எஸ், ஊடகப்பிரிவு சந்திரசேகரன், செல்லத்துரைகனகராஜ் உட்பட பலர் இருந்தனர்.
    Next Story
    ×