என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • படகு சவாரி, தங்கும் விடுதியுடன்முத்துக்குடா தீவு சுற்றுலாத் தலமாகிறது
    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.


    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.81.13 கோடி மதிப்பில் இதுவரை நிறைவடைந்த 138 திட்டப்பணிகளை ெதாடங்கி வைக்க உள்ளார்.

    மேலும் ரூ.164.85 கோடி மதிப்பிலான 1,394 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதில் 47,278 பயனாளிகளுக்கு ரூ.368.46 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.

    அனைவருக்கும் வீடு வழங்கு திட்டத்தின் கீழ் நகர்ப்புறத்தில் 550 பயனாளிகளுக்கு ரூ.23.47 கோடி மதிப்பிலும் ஊரகப் பகுதிகளில் 10,916 பயனாளிகளுக்கு ரூ.261.96 கோடி மதிப்பிலும் வீடுகள் வழங்கப்படவுள்ளன.

    புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு பொறுப்பேற்றவுடன் சுற்றுலாத்தலம் உருவாக்குவதற்காக மாவட்ட சுற்றுலா அலுவலர்களுடன் சென்று பல்வேறு இடங்களை கடந்த ஆண்டு ஆய்வு செய்தார். அதில் கட்டுமாவடியில் இருந்து அரசங்கரை வரை சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவு கடற்கரையை கொண்டுள்ள

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார் கோவில் வட்டம் நாட்டாண புரசங்குடி ஊராட்சி முத்துக்குடா தீவை சுற்றுலாத்தலமாக மாற்றுவது குறித்து அரசுக்கு கருத்து அனுப்பியுள்ளார். மேலும் இத்தட்டம் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையிலும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி அலையாத்திக் காடுடன் தீவு போன்று உள்ள முத்துக்குடாவில் படகு சவாரியும், தங்கும் விடுதியு ஏற்படுத்தப்பட உள்ளது. ரூ.3 கோடியிலான இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    • இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சாலை விபத்தில் பலியானார்.
    • சாலையோரத்தில் இருந்த டெலிபோன் கம்பத்தில் மோதி உயிரிழந்தார்


    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள மேக்கினிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா மகன் ஆனந்த் (வயது 29). இவர் பொன்னமராவதியல் இருந்து தனது சொந்த ஊரான மேக்கினிப்பட்டி செல்வதற்காக டுவிலரில் சென்றுள்ளார்.

    மதியாணி விளக்கு ரோடு அருகே சென்ற போது எதிர்பாரத விதமாக டெலிபோன் கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே ஆனந்த் இறந்தார்.

    இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த் உடலை கைப்பற்றி வலையபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு நடைபெற்றது
    • மாநாட்டில் பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தவேண்டும். பொன்னமராவதியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்கவேண்டும். பொன்னமராவதி வட்டம் முழுவதும் விவசாய நீர்நிலைகள் தூர்வாரப்படவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


    புதுக்கோட்டை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னமராவதி ஒன்றிய மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினருமான ந.பெரியசாமி கலந்து கொண்டு பேசினார்.

    மாநாட்டில் பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தவேண்டும். பொன்னமராவதியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்கவேண்டும். பொன்னமராவதி வட்டம் முழுவதும் விவசாய நீர்நிலைகள் தூர்வாரப்படவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏனாதி ஏஎல்.ராசு, கேஆர்.தர்மராஜன், முன்னாள் மாவட்டச்செயலர் த.செங்கோடன்மாவட்ட பொருளர் பி.திருநாவுக்கரசு ஆகியோர் பேசினர். ஒன்றிய செயலர் ப.செல்வம் நன்றி கூறினார்.





    • உ.பி.புலனாய்வு படையினர் புதுக்கோட்டை வாலிபரை கைது செய்தனர்.
    • வெடி குண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார்.

    புதுக்கோட்டை:

    உத்திரபிரதேசத்தின் சுல்தான்பூர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் நீல்காந்த் மணி புஜாரி. இவர், தலைநகரான லக்னோவில் வசிக்கிறார். மேலும் அலிகன்ச் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் தீவிர தொண்டராக உள்ளார்.

    இந்நிலையில் நீல்காந்தின் கைப்பேசி எண் வாட்ஸ்-அப்பிற்கு அறிமுகமற்ற ஒருவரிடம் இருந்து ஒரு குழும இணைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதில் சேரும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. நீல்காந்த் இதனை ஏற்று குழுமத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் அதில் இந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் வந்த மிரட்டல் செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

    உ.பி.யில் லக்னோ மற்றும் உன்னாவ் நகரிலும் கர்நாடகாவில் 4 இடங்களிலும் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக அதில் கூறப்பட்டிருந்தது. இது குறித்து லக்னோவின் மடிேயான் காவல் நிலையத்தில் நீல்காந்த் புகார் அளித்தார்.

    போலீசார் இப்புகாரை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த வாட்ஸ் அப் தகவல் தமிழகத்தில் இருந்து வந்ததை கண்டறிந்தனர். மேலும் இதை அனுப்பியவர் புதுக்கோட்டையின் திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்த அன்சார் அலி என்பவரின் மகன் ராஜ்முகம்மது (வயது 22) என கண்டறிந்தனர்.

    இந்த தகவலை தமிழக போலீசாருக்கு உ.பி. போலீசார் தெரியப்படுத்தினர். இதையடுத்து திருக்கோகர்ணத்தில் ராஜ் முகம்மதுவை பிடித்து தமிழக போலீசார் விசாரித்துள்ளனர்.

    இதில் அந்த தகவலை தாம் அனுப்பியதாக அவர் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து உ.பி.யின் எஸ்ஐடி எனும் சிறப்பு புலனாய்வு படையின் ஒரு குழுவினர் லக்னோவில் இருந்து விமானத்தில் சென்னை வந்தனர். இவர்கள் தமிழக போலீசார் உதவியுடன் ராஜ் முகம்மதுவிடம் விசாரித்தனர். பிறகு அவரை கைது செய்தனர்.

    • போலீஸ்காரர் தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
    • சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

    புதுக்கோட்டை:

    மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ், இவர் கடந்த 2011ம் ஆண்டு காவல்த்துறையில், காவலராக பணியில் சேர்ந்துள்ளார். அதிலிருந்து பணிமாறுதல் காரணமாக ஒவ்வொரு மாவட்டங்களாக பணியாற்றி வந்த அவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டைக்கு பணி மாறுதல் அடைந்து அங்கு பணியாற்றி வந்துள்ளார்.

    மேலும் புதுப்பட்டி, கோட்டைப்பட்டினம் ஆகிய இடங்களில் பணியாற்றி வந்த அவர் தற்போது அறந்தாங்கி காவல் நிலையத்தில் காவல்த்துணை கண்காணிப்பாளருக்கு ஓட்டுனராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் இவர், சட்ட விரோதமாக தொழில் செய்பவர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களிடமிருந்து பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்தீபன் உத்தரவின் பெயரில் அரியலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இதில் மன உலைச்சலுக்கு ஆளான ரமேஷ் தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதனை அறிந்த அவரது மனைவி உடனடியாக அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்பு வீடடிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். பணி மாறுதல் காரணமாக தற்கொலைக்கு முயன்ற காவலரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அங்கன்வாடி பள்ளிகளில் திடீர் ஆய்வு நடைபெற்றது.
    • குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு சுவையாக உள்ளதா என ஆய்வு நடந்தது

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கந்தர்வகோட்டை ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர், கொத்த கம் பகுதிகளில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களை ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக் மழவராயர் ஆய்வு செய்தார்.

    அப்பொழுது அங்கன்வாடி மையங்களில் உணவு சமைக்கும் இடங்களை பார்வையிட்டு சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    மேலும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் உள்ளதா என சாப்பிட்டு பார்த்து தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது ஒன்றியக் குழுத் தலைவருடன்மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் உடனிருந்தார்.

    • வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
    • தனியாக இருந்த பெண்ணிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பகுடி அருகே மழையூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் ஷேக்முகமது மனைவி பாத்திமா பேகம்(வயது29). இவர் நேற்று வீட்டில் மதியம் தனியாக உறங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்கம் சத்தம் கேட்டுள்ளது.

    என்வென்று பார்க்க போனபோது அங்கு மறைந்திருந்த 3 மர்ம நபர்கள், பாத்திமா பேகம் கழுத்தில் அணிந்திருந்த ஏழரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து பாத்திமா பேகம் கொடுத்த புகாரின் ேபரில் மழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற மூன்று பேரை தேடி வருகின்றனர்.

    • அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
    • எண்ணும் எழுத்தும் இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் இயக்க மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான 5 நாள் பயிற்சி நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

    மாணவர்கள் கல்வியை சுமையாக கருதாமல் சுகமாக கருத வேண்டும். மாணவர்களிடம் இருக்கும் நேரத்தை ஆசிரியர்கள் பயனுள்ள வகையில் செலவிட வேண்டும்.பயிற்சிக்கு ஆசிரியர்கள் சந்தோசமாக வரவேண்டு ம். அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களை தக்க வைக்க வேண்டும்.

    மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்.பயிற்சியில் ஆசிரியர்கள் ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்களுடைய கற்பித்தல் முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

    • பா.ஜ.க.சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
    • மத்திய அரசின் 8 ஆண்டுகள் நிறைவு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டுகள் நிறைவு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் வடகாடு முக்கத்தில் நடை பெற்றது.

    திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய தலைவர் ஞான.வில்லன்துரை மற்றும் அறந்தாங்கி வடக்கு ஒன்றிய தலைவர் ஆதிமூலம் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத்தலை வர் சிவசாமி கண்டியர், மாவட்ட பொருளாளர் அம்பாள் சுகன்யா, மாவட்ட செயலாளர் மலர்மணி, கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் அபிமன்யு முருகேசன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டனர்.

    • பொதுவாகவே அம்மை நோயை குணமாக்கும் தன்மை அயிரை மீனுக்கு உண்டு என்பதால் உணவகத்தினர் அதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
    • தற்போது உள்ள விலைவாசி உயர்வில் கிடைக்கும் மீன்களை விற்பனை செய்துவிட்டு போகாமல் வாடிக்கையாளர்களின் திருப்தி என்பதையே நோக்கமாக கொண்டு உணவக உரிமையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

    புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் எதிரே தனியாருக்கு சொந்தமான அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வழங்கப்படும் உணவு வகைகளின் சுவைக்கு கட்டுப்பட்ட பலர் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருந்து வருகிறார்கள். அவர்களை திருப்திப்படுத்தவும், கூடுதல் சுவை தரவும் இங்கு சமைக்கப்படும் அயிரை மீன் குஞ்சுகளுக்கு தேங்காய் பால் கொடுக்கின்றனர்.

    கூடுதல் வேலை, கூடுதல் செலவு என்றாலும் வாடிக்கையாளர்களின் திருப்தியே தங்களுக்கு முக்கியம் என்கிறார்கள் அதன் உரிமையாளர்கள். பசியோடு வருபவர்கள் ருசியோடு சாப்பிடும் வகையில் பல்வேறு உணவு அயிட்டங்களை வழங்கி வருகின்றனர்.

    இருப்பதிலேயே கடல் வாழ் உயிரினங்களை உண்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் குளங்களில் பிடிக்கப்படும் அயிரை மீன் குஞ்சுகளை வாங்கி அவற்றிற்கு தேங்காய் பால் கொடுத்து ஊற வைத்து அந்த மீன்கள் நன்றாக குடித்தபின் அவற்றை பக்குவமாக சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.

    பொதுவாகவே அம்மை நோயை குணமாக்கும் தன்மை இந்த அயிரை மீனுக்கு உண்டு என்பதால் உணவகத்தினர் அதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

    இதை சாப்பிடுவதற்காகவே தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே இந்த மீன்கள் கிடைக்கின்றன. தற்போது உள்ள விலைவாசி உயர்வில் கிடைக்கும் மீன்களை விற்பனை செய்துவிட்டு போகாமல் வாடிக்கையாளர்களின் திருப்தி என்பதையே நோக்கமாக கொண்டு உணவக உரிமையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

    மேலும் மீன் வகைகளில் வஞ்சிரம், சீலா, காரை, மூக்குமீன் என பலவகைகளும் இங்கு கிடைக்கிறது. புதுக்கோட்டைக்கு பெயர் போன முட்டை மாஸ் வகைகளும் வழங்கப்படுகிறது. பொடி மாஸ், பெருவெட்டு மாஸ், லாப்பா, கோல்டன் மாஸ் என பல வகை உணவுகளை செய்து கொடுக்கிறார்கள்.

    • முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • அரசு விழாவில் பங்கேற்க வருகிறார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் வரும் 8-ந் தேதி நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார். இதையடுத்து, பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கலெக்டர் கவிதா ராமு, திருச்சி சரக டிஐஜி, புதுக்கோட்டை எஸ்.பி. மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி பேசும் போது, வரும் 8-ந் தேதி அன்று நடைபெறும் விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கோடிக்கணக்கான மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் கொண்டுவரும் வகையில் திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.

    பொதுமக்களின் தேவைகளான வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட குறைகளை தீர்க்கும் வகையில் அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி விழாவினை சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்றார்.

    இக்கூட்டத்தில் மெய்யநாதன் பேசும் போது,எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்சி செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சியில் அதிகப்படியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

    முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழாவை அனைத்து தரப்பினரும் பெருமை கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.


    • கூட்டுறவு நகையை தனியார் வங்கியில் அடகு வைத்த வங்கி செயலாளர், நகை மதிப்பீட்டாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    • கூட்டுறவு சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நல்லூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் 4 பவுன் நகைகளை அடகு வைத்தார். அதை மீட்க முயன்ற போது நகை காணாமல் போனது தெரிய வந்தது.

    வங்கி ஊழியர்கள் மாற்று நகையை வழங்க அவரை சமாளித்தனர். இது தொடர்பாக கிருஷ்ணன் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதை பார்த்த நல்லூர், நெருஞ்சிக்குடி, வாழைக்குறிச்சி, கூடலூர் ஆகிய ஊர்களை சேர்ந்த விவசாயிகள் 800-க்கும மேற்பட்டவர்கள் வங்கியில் திரண்டனர். அவர்கள் அடகு வைத்த நகைகளின் நிலை குறித்து கேட்டனர்.

    இது தொடர்பாக கூட்டுறவு துறை அதிகாரிகள் வங்கியில் ஆய்வு மேற்கொண்ட போது 159.8 கிராம் தங்க நகைகள் காணாமல் போனதும் அதை நகை மதிப்பீட்டாளான சாமிநாதன் தனது சொந்த காரணத்துக்காக தனியார் வங்கியல் அடகு வைத்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அறந்தாங்கி கூட்டுறவு சார்பதிவாளர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் நகை மதிப்பீட்டாளர் சாமிநாதன் உடந்தையாக இருந்த வங்கி செயலாளர் சங்கிலி ஆகியோர் மீது காரையூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து கூட்டுறவு சங்கங்களின் புதுகை மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்.

    ×