என் மலர்
நீங்கள் தேடியது "பா.ஜ.க.சார்பில் தெருமுனை பிரச்சாரம்"
- பா.ஜ.க.சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
- மத்திய அரசின் 8 ஆண்டுகள் நிறைவு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டுகள் நிறைவு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் வடகாடு முக்கத்தில் நடை பெற்றது.
திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய தலைவர் ஞான.வில்லன்துரை மற்றும் அறந்தாங்கி வடக்கு ஒன்றிய தலைவர் ஆதிமூலம் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத்தலை வர் சிவசாமி கண்டியர், மாவட்ட பொருளாளர் அம்பாள் சுகன்யா, மாவட்ட செயலாளர் மலர்மணி, கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் அபிமன்யு முருகேசன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டனர்.






