என் மலர்
புதுக்கோட்டை
- அறந்தாங்கி செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
- நான்காம் காலயாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயில் தாலுகா கரகாத்திகோட்டை கிராமத்தில் அமைந்து அருள்பாளித்து வரும் ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய திருக்கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 05ம் தேதி ஞாயிற்றுகிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து 3 நாட்களாக மூன்றுகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது.விழாவின் முக்கிய நாளான நேற்று நான்காம் காலயாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.
கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீ ரமணிசர்மா குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தைக்கான அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்து ஸ்ரீ செல்வவிநாயகர் அருள்பெற்றுச் சென்றனர்.ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- பணி நீக்கப்பட்ட முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
- விருப்பமுள்ளவர்கள் அதற்கான விண்ணப்பத்தையும், விருப்பக்கடிதத்தையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)-யிடம் 13.06.2022 முதல் 18.06.2022-க்குள் வழங்க வேண்டும்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 8.11.2011 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில், பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
எனவே 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தங்களது விருப்ப கடிதம் மற்றும் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பித்து பணியில் சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியங்களிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடர்பு கொண்டு தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய விவரத்துடன் தற்போது வழங்கப்படவுள்ள பணியில் ஈடுபட
விருப்பமுள்ளவர்கள் அதற்கான விண்ணப்பத்தையும், விருப்பக்கடிதத்தையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)-யிடம் 13.06.2022 முதல் 18.06.2022-க்குள் வழங்க வேண்டும்.
அவ்வாறு பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் மட்டுமே இப்பணியிடத்திற்கு பரிசீலிக்கப்படுவர் என்பதால், இவ்வறிவிப்பிற்கேற்ப தவறாமல் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை நியாயவிலைக்கடை குறைகள் தீர்க்கும் முகாம் நடை பெற உள்ளது.
- குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை,நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு , மாற்றம் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கையினை அளிக்கலாம்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும், ஜுன் 2022, 2-வது வாரத்தில் நாளை சனிக்கிழமை (11.06.2022) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை குடும்ப அட்டைகள், நியாயவிலைக் கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம்
அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர் (கு.பொ.வ) வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம்,
முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை,நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு , மாற்றம் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கையினை அளிக்கலாம்.
பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 -ன் படி மேற்கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கந்தர்கோட்டை அருகே பெரியநாயகி அம்பாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
- தொடர்ந்து புனித நதிகளில் கொண்டுவரப்பட்ட நீர் கோவில்கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா கல்லாக்கோட்டை நாட்டைச்சேர்ந்த வெள்ளாளவிடுதி வட்டம் மங்களாக்கோவிலில்அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீஆதி மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடம் புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து புனித நதிகளில் கொண்டுவரப்பட்ட நீர் கோவில்கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டுவழிபட்டு சென்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் தலைமையில் காவலர்கள் செய்திருந்தனர்.
- குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்
- குளிக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 75). இவர் அப்பகுதியில் உள்ள மலையடி குளத்தில் குளிக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை தேடி மலையடி குளத்திற்கு சென்றனர். அங்கு ஆரோக்கியசாமி நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நமணசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆரோக்கியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசமானது
- தீயணைப்புதுறை வீரர்கள் தண்ணீரை பீ்ய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
புதுக்கோட்டை:
இலுப்பூர் அருகே தளுஞ்சியை சேர்ந்தவர் ராமு. இவரது வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் திடீரென தீப்பிடித்தது எரிந்தது.
இதையறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்புதுறை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீ்ய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் போர் எரிந்து நாசமானது.
- சமையல் அறையில் புகுந்த விஷப்பாம்பு பிடிப்பட்டது
- பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்
புதுக்கோட்டை:
இலுப்பூர் அருகே இருந்திரப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது வீட்டின் சமையல் அறையில் விஷப்பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து பாண்டியன் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில், இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விஷப்பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
புதுக்கோட்டை:
விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கடந்த
4-ந் தேதி முருகன் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அங்குள்ள கொடிமரத்தில் காப்பு கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
இதனால் கோவிலின் அடிவாரத்தில் உள்ள தேரை தூய்மை செய்யும் பணி நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து தூய்மை செய்யும் பணி முடிந்து நேற்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதன்பின்னர் அலங்காரம் செய்யும் பணிகள் தொடங்கியது.
மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வைகாசி விசாகத்திற்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி படிகளில் ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய ஏதுவாக வெயிலின் தாக்கம் பாதங்களில் தெரியாதவாறு படிகளில் கூலிங் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து மண்டகபடிதாரர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
- துவார் பிடாரி அம்மன் கோவில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.
- பெண்கள் கும்மி பாட்டுபாடி ஊர்வலமாக சென்றனர்
கறம்பக்குடி அருகே துவாா் கிராமத்தில் பிடாாி அம்மன், முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் வைகாசி திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மண்டகபடிதாரா் சார்பில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து முளைப்பாரி விழா, பொங்கல் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.
இதில் துவாா், கெண்டையன்பட்டி, குளவாய்பட்டி, பெத்தாரிப்பட்டி, ஆண்டி குளப்பெண்பட்டி ஆகிய கிராமங்களை சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் இல்லங்களில் குடங்களை அலங்கரித்து அதில் தென்னம் பாலைகளை வைத்து தலையில் சுமந்து கும்மி பாட்டுகள் பாடியபடி ஊா்வலமாக வந்தனா்.
இதில் திருநங்கைகளும் கலந்து கொண்டு மதுகுடங்களை ஏந்தி பாட்டு பாடி கும்மியடித்தது பக்தா்களை கவா்ந்தது. பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அனைத்து கிராம மக்களும் ஒன்று கூடி பிடாரி அம்மன் கோவிலை வந்தடைந்து சுவாமியை வழிபட்டனா்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மழையூர் போலீசார் செய்திருந்தனா்.
- தமிழகத்திற்கு நல்ல அமைச்சர்களை புதுக்கோட்டை மாவட்டம் கொடுத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
- திருமயம் வட்ட மருத்துவமனை 10 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும் என முதல்வர் அறிவிப்பு
புதுக்கோட்டை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
எந்தக் கோட்டையாக இருந்தாலும் அது ஒரு நாள் பழைய கோட்டையாக ஆகிவிடும். ஆனால் எப்போதும் புதிய- கோட்டையாகவே இருப்பது, இந்த புதுக்கோட்டை! தமிழகத்திற்கு நல்ல அமைச்சர்களைக் கொடுத்த இந்த புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நான் நன்றி.
இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டப் பணிகள் மட்டுமல்லாமல், இந்த மாவட்டத்தினுடைய மக்கள் மேலும் பயனடையும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
திருமயம் பகுதி மக்கள் பயன்பெறக்கூடிய வகையில், 10 கோடி ரூபாய் செலவில், கூடுதல் படுக்கைகள், நவீன அறுவை சிகிச்சை அரங்கம் போன்ற வசதிகளோடு, திருமயம் வட்ட மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.
இந்த மாவட்டத்தில் முக்கிய மீன்பிடிப்பு மையங்களாக இருந்து வரும் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் வாழக்கூடிய மீனவ மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், கோட்டைப்பட்டினம் மீன் இறங்குதளம் 15 கோடி ரூபாய் செலவிலும், ஜெகதாபட்டினம் மீன் இறங்குதளம் 15 கோடி ரூபாய் செலவிலும் மேம்படுத்தப்படும். மேலும் ஜெகதாப்பட்டினத்தில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
மொத்தமாகச் சொல்வதாக இருந்தால், மாநிலம் முழுமைக்கும் என்ன தேவை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்ன தேவை, ஒவ்வொரு தனிமனிதனின் தேவையும் என்ன என்பதை பார்த்துப் பார்த்துச் செய்யக்கூடிய அரசாக நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- அரசு கல்லூரியில் கழிப்பறை அமைக்கும் பணி தொடங்க உள்ளது.
- கல்லூரியில் தரமான விளையாட்டு மைதானமும் அமைய உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்ைட மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருநாவலூர் அரசுக் கல்லூரியில் அனைத்து வசதிகளுடன்கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என மாநில சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருநாவலூர் அரசுகலை அறிவியல் கல்லூரியில் ஆண்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி அமைச்சர் பேசியதாவது.
இக்கல்லூரியில் ரூ.25 லட்சத்தில் கழிப்பறைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். முட்கள் நிறைந்த காடாக விளங்கும் இக்கல்லூரி வளாகத்தை உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்புடன் ரூ.20 லட்சம் செலவில் மரக்கன்றுகளை நட்டு சோலைவனமாக்கும் பணி தொடங்கப்படும்.
அனைத்து வசதிகளுடன்கூடிய தரமான விளையாட்டு மைதானமும் அமைத்து தரப்படும். இக்கல்லூரியின் மேம்பாட்டுக்காக தமிழக அரசு ரூ.1.1 கோடியை ஒதுக்கியுள்ளது என்றார்.
- புதுக்கோட்டையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளின் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
- ரூ.81.31 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.143.05 கோடி மதிப்பீட்டிலான 1,397 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
புதுக்கோட்டை:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் தொடங்கி வைத்த நலத்திட்ட பணிகள் விபரம் வருமாறு:
ரூ.81.31 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.143.05 கோடி மதிப்பீட்டிலான 1,397 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.379.30 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.81 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை (நபார்டு மற்றும் கிராம சாலைகள்), சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை என மொத்தம் ரூ.143 கோடி மதிப்பீட்டில் 1,397 திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட துறைகளின் சார்பில் முதலமைச்சர் பயனாளிகளுக்கு ரூ.379 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.
ஆகமொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மாைல நடைபெறும் அரசு விழாவில் புதிய திட்டப் பணிகள், நலத்திட்ட உதவிகள் என சுமார் ரூ.603.66 கோடி மதிப்பிலான மக்கள்நலத் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.






