என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியநாயகி அம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா
    X

    பெரியநாயகி அம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா

    • கந்தர்கோட்டை அருகே பெரியநாயகி அம்பாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
    • தொடர்ந்து புனித நதிகளில் கொண்டுவரப்பட்ட நீர் கோவில்கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா கல்லாக்கோட்டை நாட்டைச்சேர்ந்த வெள்ளாளவிடுதி வட்டம் மங்களாக்கோவிலில்அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீஆதி மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடம் புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து புனித நதிகளில் கொண்டுவரப்பட்ட நீர் கோவில்கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டுவழிபட்டு சென்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் தலைமையில் காவலர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×