என் மலர்
நீங்கள் தேடியது "அறந்தாங்கி செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா"
- அறந்தாங்கி செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
- நான்காம் காலயாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயில் தாலுகா கரகாத்திகோட்டை கிராமத்தில் அமைந்து அருள்பாளித்து வரும் ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய திருக்கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 05ம் தேதி ஞாயிற்றுகிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து 3 நாட்களாக மூன்றுகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது.விழாவின் முக்கிய நாளான நேற்று நான்காம் காலயாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.
கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீ ரமணிசர்மா குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தைக்கான அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்து ஸ்ரீ செல்வவிநாயகர் அருள்பெற்றுச் சென்றனர்.ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






