என் மலர்
நீங்கள் தேடியது "MUKURTHAKAL PLANTING PROGRAM IN VIRALIMALAI MURUGAN TEMPLE CHARIOT"
புதுக்கோட்டை:
விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கடந்த
4-ந் தேதி முருகன் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அங்குள்ள கொடிமரத்தில் காப்பு கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
இதனால் கோவிலின் அடிவாரத்தில் உள்ள தேரை தூய்மை செய்யும் பணி நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து தூய்மை செய்யும் பணி முடிந்து நேற்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதன்பின்னர் அலங்காரம் செய்யும் பணிகள் தொடங்கியது.
மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வைகாசி விசாகத்திற்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி படிகளில் ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய ஏதுவாக வெயிலின் தாக்கம் பாதங்களில் தெரியாதவாறு படிகளில் கூலிங் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து மண்டகபடிதாரர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.






