என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு கல்லூரியில் கழிப்பறை அமைக்கும் பணி
- அரசு கல்லூரியில் கழிப்பறை அமைக்கும் பணி தொடங்க உள்ளது.
- கல்லூரியில் தரமான விளையாட்டு மைதானமும் அமைய உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்ைட மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருநாவலூர் அரசுக் கல்லூரியில் அனைத்து வசதிகளுடன்கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என மாநில சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருநாவலூர் அரசுகலை அறிவியல் கல்லூரியில் ஆண்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி அமைச்சர் பேசியதாவது.
இக்கல்லூரியில் ரூ.25 லட்சத்தில் கழிப்பறைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். முட்கள் நிறைந்த காடாக விளங்கும் இக்கல்லூரி வளாகத்தை உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்புடன் ரூ.20 லட்சம் செலவில் மரக்கன்றுகளை நட்டு சோலைவனமாக்கும் பணி தொடங்கப்படும்.
அனைத்து வசதிகளுடன்கூடிய தரமான விளையாட்டு மைதானமும் அமைத்து தரப்படும். இக்கல்லூரியின் மேம்பாட்டுக்காக தமிழக அரசு ரூ.1.1 கோடியை ஒதுக்கியுள்ளது என்றார்.






