என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • திருவரங்குளம் அரங்குளநாதர், பெரியநாயகி அம்பாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • சிவ...சிவ..., ஹரஹர கோஷத்துடன் அசைந்தாடி வந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

    இதையடுத்து இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிங்க வாகனம், காளை, வெள்ளி குதிரை, காமதேனு, அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்து வந்தது.

    இதைதொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி-அம்பாளுக்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாளுக்கு பட்டாடை உடுத்தி, தங்க-வைர ஆபரணங்கள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் ஒரு தேரிலும், மற்றொரு தேரில் பெரியநாயகி அம்பாளும் எழுந்தருளினர்.

    தொடர்ந்து கோவில்பட்டி தேர் வடம் தொடும் வகையறாவினர் விரதமிருந்து வெண் குடை பிடித்து தாரை தப்பட்டை வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் தரிசனம் செய்துவிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனையடுத்து காலை 10.30 மணிக்கு பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்கள் கூட்டத்தில் சிவ...சிவ..., ஹரஹர கோஷத்துடன் அசைந்தாடி வந்தது. அம்பாள் தேரை அதிகளவில் பெண்கள் இழுத்து வந்தனர்.

    தேரை பக்தர்கள் நான்கு வீதிகள் வழியாக இழுத்து வந்து கோவில் நிலையை மதியம் 12.30 மணிக்கு வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேேராட்டத்தின் போது பக்தர்களுக்கு பானகம், மோர், சர்க்கரை பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு பணிகளை ஆலங்குடி சரக காவல் டிஎஸ்பி வடிவேல் தலை மையிலான ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை,மற்றும் சப்-இன் ஸ்பெக்டர் கலைச்செல்வம் ஆகியோர் மற்றும் காவல்துறை, தீயணைப்பு துறை. வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.

    • ரசாயனம் தடவி விற்பனை செய்த 30 கிலோ பச்சை பட்டாணியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    • வியாபாரி தப்பியோடி விட்டார்.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி பஸ் நிலையம் அருகே உள்ள சந்தை வீதியில் ரசாயனம் கலந்த பச்சை பட்டாணி விற்பனை செய்வதாக ெதரிந்ததையடுத்து பொன்னமராவதி பேரூராட்சி துறை அலுவலர்கள், அங்கு சென்றனர்.

    அப்போது அங்கு ரசாயனம் தடவிய பச்சை பட்டாணி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 30 கிலோ பச்சை பட்டாணி பறிமுதல் செய்தனர். மேலும் அதனை விற்பனை செய்த வியாபாரி தப்பியோடி விட்டார். இதையடுத்து பறிமுதல் செய்த பட்டாணியை பேரூராட்சித்துறை அலுவலர்கள்

    மற்றும் பணியாளர்கள் அதே பகுதியில் குழிதோண்டி புதைத்தனர். மேலும் சந்தை பகுதியில் உள்ள பொதுமக்கள் ரசாயனம் தடவிய எந்த பொருளையும் வாங்க வேண்டாம் என அறிவுரை கூறி அவ்வாறு விற்பனை செய்தால் உடனடியாக பேரூராட்சி, சுகாதாரத்துறை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறி உள்ளனர்.

    • நிதி நிறுவன ஊழியரை வெட்டி கொலை செய்ய முயன்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
    • 3 ேபர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி வலையபட்டி 1நம்பர்ரோட்டில் வசித்து வரும் கணேசன் மகன் முத்துப்பாண்டி(வயது22). இவர் தனியார் பைனான்ஸ் கம்பேனியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர்,வேலைசம்மந்தமாக கோயில்பட்டியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் நின்றுகொண்டிருந்தார்.

    அப்போது பொன்னமராவதி இந்திராநகரைச்சேரந்த சேட் மகன் நவாஸ்(24).காமராஜர்நகர்முருகன் மகன் ஹரி, தொட்டியம்பட்டி செல்வம் மகன் அழகர் ஆகிய மூவரும் முத்துப்பாண்டியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆத்திரடமடைந்த அவர்கள் முத்துபாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தாங்கள் வைத்திருந்த கத்தியால் தலை, கை, கால்களில் வெட்டியுள்ளனர்.

    இதில் பலத்தகாயமடைந்த முத்துப்பாண்டி வலையபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து வந்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற 3பேரை வலை வீசி தேடிவருகின்றனர். இதில் நவாஸ் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • 3 நாட்களாக மூன்றுகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது

    புதுக்கோட்டை

    ஆவுடையார்கோயில் தாலுகா மாகாளியேந்தல் கிராமத்தில் அமைந்து அருள்பாளித்துவரும் ஸ்ரீ மாகாளியம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி மக்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 8 தேதி புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.அதனை

    தொடர்ந்து 3 நாட்களாக மூன்றுகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது.விழாவின் முக்கிய நாளான நேற்று நான்காம் காலயாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.

    கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீ பிரபு மற்றும் சுந்தரமூர்த்தி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தைக்கான அப்பகுதியைச்சுற்றியுள்ள பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்து ஸ்ரீமாகாளியம்மன் அருள்பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 20க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • ஆலங்குடி காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி ஆய்வு செய்தார்
    • பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் சரகத்திற்குட்பட்ட ஆலங்குடி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது சரகர் காவல் துணை கண்காணிப்பாளர் வடிவேல் மற்றும் காவல் ஆய்வாளர் அழகம்மை சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். அப்போது காவல் நிலையத்தில் உள்ள கோ ப்புகளை பார்வையிட்டார். ஆய்வுக்குப் பிறகு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    • காணாமல் போன மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டனர்.
    • சாலை ஓரம் அழுகிய நிலையில் கிடந்தார்

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி தாலுகா அலுவலகம் அருகில் செம்பொட்டல் என்ற இடத்தில் சாலை ஓரம் அழுகிய நிலையில் மூதாட்டி பிணம் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மூதாட்டி உடலை மீட்டு வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கடந்த 10-ந் தேதி காணாமல் போன வலையப்பட்டி ராஜூவ் நகரை சேர்ந்த அடைக்கன் மனைவி மென்னி (வயத 70) தான் என அவர்களது உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காணாமல் போன மூதாட்டியை யாரும் அடித்துக் கொன்று உடலை இங்கே போட்டு சென்றனரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெடுவாசல் கடைமடை பகுதிக்கு வந்த காவிரி தண்ணீரை மலர் தூவி தொட்டு வணங்கி விவசாயிகள் வரவேற்ற னர்.
    • 30 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்

    புதுக்கோட்டை:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் இறுதி யில்டெல்டாபாசன வி வசா யத்திற்கு தண்ணீரை காவிரி தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலி ன் மலர் தூவி திறந்து வைத்தார். இந்த காவிரி தண்ணீரானது கல்லணை கால்வாய்கள் வழியாக, நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் புதுக் கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கடைமடை பகு திக்கு வந்தடைந்தது.

    இதை முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசா யிகள் காவிரி தாயை மலர் தூவியும், தொட்டு வணங்கியும், பாரம்பரிய நெல் மணிகளை தூவியும் வரவேற்று மகிழ்ந்தனர்.

    மேலும் இந்த காவிரி நண்ணீர் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி,மணமேல்குடி, ஆவுடையார் கோவில் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதாகவ ம் கூறப்படுகிறது.

    இறுதியில் காவிரி நீர் 148 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்து முப்பாலை பகுதிக்குசென்று அங்கிருந்து கடலில் கலக்கிறது. சற்று முன்ன தாகவே திறக்கப்பட்டுள்ள இந்த காவிரி தண்ணீரை இடை நிற்றல் இல்லாமல் தொடர்ந்து வர வழிவகை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அக்கம்பக்கத்தினர் பூசாரி பழனியிடம் சென்று மந்திரித்து வந்தால் மகளின் வயிற்று வலி தீர்ந்து விடும் எனக் கூறினர்
    • பூசாரி பழனி நீண்ட காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விசேஷ பூஜைகள் செய்து வந்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மணிபிள்ளை பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 65). இவர் அந்த பகுதியில் உள்ள கருப்புசாமி கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்வார். ஒரு சில பக்தர்களுக்கு அவரின் அருள்வாக்கு பலித்த காரணத்தினால் அந்த ஊர் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சென்றனர்.

    அதுமட்டுமல்லாமல் யாருக்காவது நீண்ட நாள் வியாதி, பில்லி சூனிய பாதிப்பு மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மந்திரித்து, விபூதி கொடுப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவர் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும், பக்தியும் வைத்திருந்த மக்கள் பூசாரி சொல்வதை வேதவாக்காக நினைத்து வந்தனர்.

    இதனால் அந்த ஊரை சேர்ந்த மக்கள் என்ன பிரச்சினை என்றாலும் தொடக்கத்தில் அவரை சென்று பார்த்து வந்தனர். ஒரு சில சுப காரியங்களுக்கும் அவரை அழைத்து சென்று மரியாதை செய்தனர். மொத்தத்தில் மணிபிள்ளை பகுதியில் பூசாரி பழனி ஒரு கடவுள் போல் வலம் வந்தார்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த சரவணன்-மீனாட்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியின் 15 வயது மகள் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். வயிற்றுவலிக்கு அவரது பெற்றோர் கைப்பக்குவமாக மருந்துகள் கொடுத்தும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் மாணவிக்கு வயிற்று வலி பூரணமாக குணமாகவில்லை.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பூசாரி பழனியிடம் சென்று மந்திரித்து வந்தால் மகளின் வயிற்று வலி தீர்ந்து விடும் எனக் கூறினர். மேலும் தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இதைக்கேட்டு அங்கலாய்த்து போன மாணவியின் தாய் தனது மகளை அழைத்துக்கொண்டு மணிபிள்ளை தெருவுக்கு சென்றார்.

    பின்னர் வீட்டில் இருந்த கோவில் பூசாரி பழனியை சந்தித்து மகளுக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வருகிறது. இதனை தீர்த்து வையுங்கள் என மன்றாடினார். உடனே பழனி அந்த அபலைப் பெண்ணிடம் உனது மகளுக்கு காத்து கருப்பு பிரச்சினை உள்ளது, என்னிடம் வந்துவிட்டாய் அல்லவா, இனிமேல் எதுவும் நேராது தைரியமாக இரு என்றார்.

    மேலும் இந்த பிரச்சினைக்கு உனது மகளுக்கு தனிமையில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி அவரை வெளியே காத்திருக்கும்படி செய்தார். பின்னர் மாணவியை மட்டும் தனியாக வீட்டிற்குள் அழைத்து சென்று சிறப்பு பூஜை செய்வதாக கூறி ஆடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவி அதிர்ச்சியில் உறைந்தார். கூச்சல் போடக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அவர் செய்வதறியாமல் அழுது புலம்பினார்.

    அப்போது கோவில் பூசாரி பழனி, இதை வெளியே சொன்னால் சாமி குத்தம் ஆகி செத்து விடுவாய் என மிரட்டினார். இதனால் உயிருக்கு பயந்து அந்த மாணவி நடந்த சம்பவத்தை தாயிடம் அப்போது சொல்லவில்லை. இருந்தபோதிலும் மாணவி அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்தார். இதனை கவனித்த அவரது தாய் மீனாட்சி மகளிடம், ஏன் மவுனமாக இருக்கிறாய் என்ன பிரச்சனை என்று கேட்டார்.

    இனி மேலும் விஷயத்தை மறைத்தால் விபரீதமாகி விடும் என்று நினைத்த மாணவி, பூஜை என்ற பெயரில் கோவில் பூசாரி தன்னிடம் அத்துமீறிய சம்பவத்தை கூறினார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மீனாட்சி, கடவுளாக நினைத்த பூசாரி இப்படி ஒரு கயமையை செய்துவிட்டாரே என்று கதறினார்.

    தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக்கூடாது என நினைத்த மீனாட்சி உடனடியாக கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் அந்த மாணவி பூசாரி பாலியல் பலாத்காரம் செய்ததில் மூன்று மாதம் கர்ப்பமாகி இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து கோவில் பூசாரி பழனியை போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தார். வயிற்று வலிக்காக மந்திரித்து விபூதி வாங்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவியை பூசாரி கற்பழித்து கர்ப்பமாக்கி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த பூசாரி பழனி நீண்ட காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விசேஷ பூஜைகள் செய்து வந்துள்ளார். ஆகவே வேறு பெண்களும் அவரால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுபற்றி விசாரணை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒருமுறை மட்டுமே மாணவியை சீரழித்ததாக பூசாரி பழனி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாகவும், வேறு அவர் மீது எந்த புகாரும் வரவில்லை என்றும், புகார்கள் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பல்வேறு ரூபங்களில் உருவாகி வரும் சூழ்நிலையில் ஆன்மீகத்தின் பேரில் ஏற்படுத்தப்படுவதை ஏற்க முடியாது. இதுபோன்ற கயவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் தாமதமின்றி தண்டிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி கறம்பக்குடியில் தமுமுகவினர் சாலை மறியல் செய்தனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கறம்பக்குடியில் தமுமுகவினர் சாலை மறியல் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    கறம்பக்குடியில் அரசு தாலுகா தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இங்கு 2 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. செவிலியர்கள் பற்றாக்குறையும் உள்ளது.

    போதிய இட வசதி இன்மையால் மருத்துவ உபகரணங்களை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதனால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மருத்துவ வசதி பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அரசு அதிகாரிகள் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதேபோல் கறம்பக்குடி சீனி கடைமுக்கம் பகுதியில் 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு பொதுமக்கள் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த டாஸ்மாக் கடைகளை இடம்மாற்ற பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கறம்பக்குடி நகர முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்கக் கோரியும்,

    போதிய வசதிகள் செய்து தர வலியுறுத்தியும், சீனி கடைமுக்கம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை இடம் மாற்ற கோரியும் கறம்பக்குடி சீனி கடைமுக்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • கறம்பக்குடி அருகே கார் மோதி 8 ஆடுகள் பலியானது.
    • ஆடுகளுடன் மழையூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மோதியது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா தீத்தானிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே புதுக்கோட்டை மழையூர் குருவினாங் கோட்டையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சித்திரவேல், (வயது 37) இவரது தம்பி ராஜ்குமார்.

    இவர்கள் இருவரும் அவரது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று வீடு திரும்பினர். அவர்கள் ஆடுகளுடன் மழையூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மோதியதில் 7 செம்மறி ஆடுகள், 1 வெள்ளாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    மேலும் பாலகிருஷ்ணன் மகன் சித்திரவேல் என்பவருக்கு தலையிலும். ராஜ்குமார் என்பவருக்கு காலிலும் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக மழையூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அறந்தாங்கி செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
    • நான்காம் காலயாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயில் தாலுகா கரகாத்திகோட்டை கிராமத்தில் அமைந்து அருள்பாளித்து வரும் ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய திருக்கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 05ம் தேதி ஞாயிற்றுகிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து 3 நாட்களாக மூன்றுகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது.விழாவின் முக்கிய நாளான நேற்று நான்காம் காலயாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.

    கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீ ரமணிசர்மா குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தைக்கான அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்து ஸ்ரீ செல்வவிநாயகர் அருள்பெற்றுச் சென்றனர்.ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பணி நீக்கப்பட்ட முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
    • விருப்பமுள்ளவர்கள் அதற்கான விண்ணப்பத்தையும், விருப்பக்கடிதத்தையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)-யிடம் 13.06.2022 முதல் 18.06.2022-க்குள் வழங்க வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 8.11.2011 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில், பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

    எனவே 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தங்களது விருப்ப கடிதம் மற்றும் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பித்து பணியில் சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இது தொடர்பாக தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியங்களிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடர்பு கொண்டு தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய விவரத்துடன் தற்போது வழங்கப்படவுள்ள பணியில் ஈடுபட

    விருப்பமுள்ளவர்கள் அதற்கான விண்ணப்பத்தையும், விருப்பக்கடிதத்தையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)-யிடம் 13.06.2022 முதல் 18.06.2022-க்குள் வழங்க வேண்டும்.

    அவ்வாறு பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் மட்டுமே இப்பணியிடத்திற்கு பரிசீலிக்கப்படுவர் என்பதால், இவ்வறிவிப்பிற்கேற்ப தவறாமல் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×