என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • கலெக்டர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    புதுக்ேகாட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 178 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.

    இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்காதல் தகராறில் பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • சத்யராஜ் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா நரங்கியப்பட்டு வைரவன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேம்பையன் மகன் சத்யராஜ் (வயது 36). இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    இதற்கிடையே தனது ஊரின் அருகாமையில் உள்ள மற்றொரு சமுதாயத்ச்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் 5 ஆண்டுகள் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்யராஜ் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் சத்யராஜை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இதனால் மனமுடைந்த சத்யராஜ் தனது வீட்டின் பின்புறம் உள்ள பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான மரத்தில் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தகவலறிந்த புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா, ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன் ஆகியோர் சத்யராஜின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி அளித்தனர்.

    இதைதொடர்ந்து கறம்பக்குடி போலீசார் சத்யராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலங்குடி திருவரங்குளம் அரங்குளநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா நடை பெற்றது.
    • பின்னர் சுவாமி அம்பாள் பட்டாடை உடுத்தி தங்க வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் தெப்பகுளத்தில் எழுந்தருளினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளத்தில் அரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது.இதையடுத்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் சுவாமி அம்பாள் பட்டாடை உடுத்தி தங்க வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் தெப்பகுளத்தில் எழுந்தருளினார். மேள தாளம் முழங்க வாண வேடிக்கையுடன் எட்டு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி அம்பாள் மூன்று முறை தெப்பத்தில் சுற்றி வந்தனர்.

    இதில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு கிராமிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாட்டை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • கோவில் தேரோட்டத்தில் 8 பெண்களிடம் 25 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
    • பல்லாயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் திருவிழா என்பதால் பல்லாயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

    குறிப்பாக அதிகளவு பெண்கள் பங்கேற்றிருந்தனர். இந்த நிலையில் திருவிழா கூட்டத்தை பயன்படுத்திய திருடர்கள் பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றுள்ளனர். செயின் பறிக்கப்பட்டு சற்று நேரத்திற்கு பிறகு தான் தங்கள் செயின் பறிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து செய்வதறியாது தவித்த 8 பெண்கள் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பெண்கள் பறிகொடுத்த தங்கத்தின் மொத்த எடை 25 பவுன் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து விராலிமலை போலீசார் அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த சுமார்30 வயது மதிக்கத்தக ஒரு பெண்ணை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பொற்பனை முனீஸ்வரருக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பூத்தட்டு எடுத்து பெண்கள் மேளதாளத்துடன் கோவிலுக்கு வந்தனர்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கும்மங்குளத்தில் பொற்பனை முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஈஸ்வரி அம்மன், காளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன. கோவிலில் கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.

    விழாவில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் தெம்மாங்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது. நேற்று வைகாசி விசாக சந்தன காப்பு விழா நடைபெற்றது.

    இதையொட்டி கும்மங்குளம் கிராம மக்கள், பெண்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாலையில் பெண்கள் பூத்தட்டு எடுப்பு நிகழ்ச்சியும் நடந்தது. கும்மங்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து மேளதாளம் முழங்க பெண்கள் பல்லாக்கு வைத்து பூத்தட்டு எடுத்து கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் பொற்பனை முனீஸ்வரருக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இளைஞர் மன்றம் மற்றும் மகளிர் மன்றம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர் திருவிழா 10 நாள் நேற்றுடன் முடிவு பெற்றது.


    • சட்டவிரோதமாக மது விற்ற 3 ேபரை போலீசார் கைது செய்தனர்.
    • மது பாட்டில்கள், பணத்தை பறிமுதல் செய்தனர்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா இலுப்பூர் பகுதியில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனம் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்றுக் கொண்டிருந்த

    அதே பகுதியை சேர்ந்த மருதமுத்து ( வயது 72), வெண்ணாவல்குடியை சேர்ந்த குமார் (58), மேலகரும்பிரா ன்கோட்டையைச் சேர்ந்த குழந்தை மகன் விஜய் (42) ஆகியோரை பிடித்து, அவர்களிடமிருந்த மதுபாட்டில் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்த மாணவி மாயமானார்
    • 10-ம் வகுப்பு படித்து வருகிறார்


    புதுகோட்டை:

    புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் ஊராட்சி மே லகோட்டையை சேர்ந்த மாணவி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி காணவில்லை. மாணவியின் தாயார் எங்கு ேதடியும் கிடைக்காததால், ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் சப்-இன்ஸ்பெடர் கலைசெல்வம் வழக்கு பதிவு செய்து காணாமல்போன மாணவியை தேடிவருகின்றனர்.




    • கீரமங்கலம் சந்தைப் பேட்டை பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு கூட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • ஆலங்குடியில் இயங்கிவந்த உழவர் சந்தையை மீண்டும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் சந்தைப் பேட்டை பகுதியில் குவிந்து கிடக்கும் கழிவு குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு கூட்ட மாநாட்டில் தீர்மானம். நிறைவேற்றப்பட்டது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு கூட்டம் கீரமங்கலத்தில் முன்னா ள் கிராம நிர்வாக அலுவலர் மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மாதவன் பங்கேற்று இன்றைய அரசியல் எதிர்கால கடமைகள் குறித்து உரையாற்றினார்.

    பின்னர் கூட்டத்தில் கீரமங்கலம் சந்தப்பேட்டையில் கழிவு குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து திருக்கட்டளை வேப்பங்குடி வழியாக ஆலங்குடி சென்று வந்த பேருந்து பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.உடனடியாக பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவரங்குளத்திலிருந்து காயாம்பட்டி சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆலங்குடியில் இயங்கிவந்த உழவர் சந்தையை மீண்டும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கைக்குறிச்சி திருவரங்குளம் வம்பன் 4ரோடு போன்ற பகுதிகளில் நடை பெறும் வாரச்சந்தைகளை ஊராட்சி நிர்வாகமே நடத்தும்வகையில் மாவ ட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .




    • நகைக்கடை அதிபரை மிரட்டி பணம், நகைகளை பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
    • இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் அருண் குமாரை வழிமறித்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் காட்டுபாவா பள்ளிவாசல் கீழக்குடி பற்றி பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 30) இவர் கீழசெவல்பட்டி யில் நகை கடை நடத்தி வருகிறார்.

    பின்னர் தனது உறவினர் சுப்பிரமணியன் என்பவருடன் தனித்தனியாக இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பில்லமங்கலம் சுடுகாடு அருகே வந்தபோது அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் அருண் குமாரை வழிமறித்தனர்.

    பின்னர் அரிவாளை காட்டி மிரட்டி 2.60 லட்சம் பணத்தையும், ஆறே முக்கால் பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அருண்குமார் திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் சப்-இன்ஸ்பெக்டர் அனந்தராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விராலிமலை முருகன் கோவிலில் இன்று கோலாகலமாக தேரோட்டம் நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து இழத்து துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பிரசித்திபெற்ற முருகன் திருத்தலங்களில் ஒன்றான விராலிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருத்தலம் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது. இங்கு வருட வருடம் வைகாசி விசாக திருவிழாவானது கோலாகலமாக நடைபெறுவது வழக்கம், கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறாமலே இருந்தது.

    கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு வழக்கமான உற்சாகத்துடன் தேர்திருவிழாவானது தொடங்கியது. இந்த தேரினை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.விஜயபாஸ்கர் சாமி தரிசனம் செய்து தேரினை வடம் பிடித்து இழுத்து வைத்தார்.

    இந்த தேர் திருவிழாவில் இரண்டு தேர் வருவது வழக்கம் , முதல் தேரில் விநாயகரும் , இரண்டாவது தேரில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

    கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது, அன்று முதல் முருகன் வள்ளி தெய்வானையுடன் அலங்காரம் செய்யப்பட்டு தினந்தோறும் வீதிஉலா வந்தது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது, சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நாளை தெப்பத்திருவிழா விமர்சையாக நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்திருவிழாவிற்கு அ.தி.மு.க. சார்பில் அன்னதானம் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர் மோர், பானகம், பழங்கள் வழங்கப்பட்டது.

    தி.மு.க. இலக்கிய அணி தென்னலூர் பழனியப்பன், புதுக்கோட்டை ஆவின் சேர்மன் பழனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெபற்றனர்.

    • சித்தி விநாயகர் கோவில் வருடாபிஷேகம் நடைபெற்றது.
    • அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு சிக்தி விநாயகர் கோயில் ஐந்தாம் ஆண்டு வருடாபிஷேக விழா பட்டி ஊரணி கரை கோவிலில் நடைபெற்றது. ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு பட்டி ஊரணி கரையில் அமைந்திருக்கும் சிக்தி விநாயகர் கோவில் ஐந்தாம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

    இதில் சிவாச்சாரியார்கள் யாகசாலை அமைத்து வேதமந்திரம் முழங்க சக்தி விநாயகருக்கு பால், பழங்கள், பன்னீர்,புஷ்பம், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிக்தி விநாயகர் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் கிராம பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிக்தி விநாயகரை தரிசனம் செய்து சென்றனர் பின்னர் அனைவருக்கும் அறுசுவை அன்ன தானம் வழங்கப்பட்டது. வருடாபிஷேக விழா ஏற்பாட்டை, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • திருவரங்குளம் அரங்குளநாதர், பெரியநாயகி அம்பாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • சிவ...சிவ..., ஹரஹர கோஷத்துடன் அசைந்தாடி வந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

    இதையடுத்து இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிங்க வாகனம், காளை, வெள்ளி குதிரை, காமதேனு, அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்து வந்தது.

    இதைதொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி-அம்பாளுக்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாளுக்கு பட்டாடை உடுத்தி, தங்க-வைர ஆபரணங்கள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் ஒரு தேரிலும், மற்றொரு தேரில் பெரியநாயகி அம்பாளும் எழுந்தருளினர்.

    தொடர்ந்து கோவில்பட்டி தேர் வடம் தொடும் வகையறாவினர் விரதமிருந்து வெண் குடை பிடித்து தாரை தப்பட்டை வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் தரிசனம் செய்துவிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனையடுத்து காலை 10.30 மணிக்கு பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்கள் கூட்டத்தில் சிவ...சிவ..., ஹரஹர கோஷத்துடன் அசைந்தாடி வந்தது. அம்பாள் தேரை அதிகளவில் பெண்கள் இழுத்து வந்தனர்.

    தேரை பக்தர்கள் நான்கு வீதிகள் வழியாக இழுத்து வந்து கோவில் நிலையை மதியம் 12.30 மணிக்கு வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேேராட்டத்தின் போது பக்தர்களுக்கு பானகம், மோர், சர்க்கரை பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு பணிகளை ஆலங்குடி சரக காவல் டிஎஸ்பி வடிவேல் தலை மையிலான ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை,மற்றும் சப்-இன் ஸ்பெக்டர் கலைச்செல்வம் ஆகியோர் மற்றும் காவல்துறை, தீயணைப்பு துறை. வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.

    ×