என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • துணை மின் நிலைய பணியை விரைவாக தொடங்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே வடவாளம் பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு பிரச்சினையால் அடிக்கடி மின் மோட்டார்கள் பழுதடைந்து வந்தது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மீண்டும் வருவதற்கு 3 நாட்களுக்கு மேலாக ஆகிவிடுகிறது.

    இதை சரி செய்யும் வகையில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் வடவாளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதனை தொடர்ந்து துணை மின்நிலையம் அமைப்பதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணி தொடங்கப்பட்ட நிலையில் அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளை விரைவாக மீண்டும் தொடங்ககோரி புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபடடனர்.

    இதற்கு வடவாளம் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பட்டி விடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவாரத்தை நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து செல்லாததால் அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையி ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அரசு பள்ளியை பூட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • தந்தையின் வேலை பறிபோனதால் ஆத்திரம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட தட்டாஊர ணி பகுதியில் கடந்த 28 ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள் ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளிக்கான இடத்தை அப்போது பிச்சையா என்பவர் தானமாக பத்திரப்பதிவு செய்து பள்ளிக்கு கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளி அமைந்துள்ள இடம் தனது இடம் என பிச்சையாவின் மகன் சின்னையா கூறி நேற்று பள்ளிக்கு பூட்டு போட்டுள்ளார்.

    இதனால் பள்ளிக் கு வந்த குழந்தைகள் அனைவரும் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். இதனை அறிந்த கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சின்னையாவிடம் பேச்சுவார்த்தை நடத் சாவியை வாங்கி பூட்டை திறந்தனர். தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சினையனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    முதல்கட்ட விசாரணையில் இந்த பள்ளி நிலத்தை தனது தந்தை தானமாக வழங்கியதற்காக அவருக்கு கறம்ப க்குடி பேரூராட்சியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர் பதவி வழங்கப்பட்டது.

    ஆனால் அவர் அந்த பணியை சரி வர செய்யாததால் அந்த பதவியிலிருந்து அவரை நீக்கம் செய்ய அதிகா ரிகள் முடிவை எடுத்ததாகவும் இதனால் விரக்தி அடைந்த சின்னையா ப ள்ளிக்கு பூட்டு போட்டு உள்ளதாகவும் தெரியவந்தது.

    • குற்றவாளிகளை கையாள்வது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • மாவட்ட எஸ்.பி.தலைமையில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி சரக காவல் நிலையத்துக்குட்பட்ட குற்றவாளிகளை காவல் நி லையத்தில் அடைக்கும் போது எப்படி அவர்களிடம் நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் தலைமையில் விழிப்புணர்வு முகாம் ஆலங்குடி காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சரக துணை காவல் சூபிரண்ட் ஆப் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட 9 காவல் நிலையங்கள் உள்ளது. இதில் ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், செம்பட்டிவிடுதி, ஆலங்குடி அனைத்து மகளி ர் காவல் நிலையம் மற்றும் மதுவிலக்கு ஆகிய ஆறு காவல் நிலையங்களும், கறம்பக்குடி, மழையூர், ரெகுநாதபுரம் ஆகிய 3 காவல் நிலையங்கள் என மொத்தம் 9 காவல் நிலையங்கள உள்ளன.

    இந்த காவல் நிலையங்களுக்குப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யப்படும் போதும், அவர்களை காவல் நிலையத்தில் போலீசார் அடைக்கும்போதும் போலீசார் எப்படி கையாளவேண்டும், அதன் வழிமுறைகள் என்ன என்பது குறித்து மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் போலீஸாருக்கு வி ளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    விழிப்புணர்வு முகாமில் ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் உள்பட 9 காவல் நிலையங்களில் உள்ள அனைத்து காவல் ஆய் வாளர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

    • பிளம்பர் தற்கொலை வழக்கில் கைதான 4 பேரின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்

    புதுக்கோட்டை:

    கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியப்பட்டு வைரவன் தெருவை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 36). பிளம்பர். இவர் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்யராஜை கறம்பக்குடியை சேர்ந்த சிலர் தாக்கியதாகவும், அதனால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து சத்யராஜின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது உறவினர்கள் அனுமதித்தனர்.

    இந்நிலையில் சத்யராஜ் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கறம்பக்குடியை சேர்ந்த மைதீன் (வயது 24), முகமதுஅசன் (26), ஜபருல்லா (26), ஹாலித் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதையறிந்த அந்த 4 பேரின் உறவினர்கள் கறம்பக்குடி போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாரை கண்டித்தும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் கோஷம் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெஜினா பேகம் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    • பா.ஜ.க.சார்பில் மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற்றது.
    • நலத்திட்ட விழிப்புணர்வும் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் அபி மன்யு முருகேசன் தலைமையில், மத்திய அரசின் நலத்திட்ட விழிப்புணர்வு மற்றும் குறைகேட்பு முகாம் ஆலங்குடி வட்டங்கச்சேரி திடலில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பா.ஜ.க. மாவட்ட பார்வையாளர் புரட்சி கவிதாசன், மாவட்ட தலைவர் செல்வம், அழகப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாவட்ட மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு சார்பாக நடைபெற்ற இந்த முகாமிற்கு ஆலங்குடி டவுன் மற்றும் ஆலங்குடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து மத்திய அரசின் நலத்திட்டங்களில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறைகளை மனுக்களை அளித்துள்ளனர்.

    இதில் பெரும்பாலான மனுக்கள் குடும்ப அட்டைகளில் உள்ள முன்னுரிமை இல்லாத அட்டைகளை முன்னுரிமை உள்ள அட்டைகளாக மாற்றி தர வேண்டியே பெரும்பாலான விண்ணப்பங்கள் இருந்தன என்று தெரிவித்தனர்.

    • முத்துமாரியம்மன்கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
    • காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட குறிச்சிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா நடைபெறுவது வழக்கம். 12 நாட்கள் நடைபெறுகின்ற திருவிழாவில், கடந்த 5ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது.

    அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், பால்குடம், அக்கினி காவடி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான நேற்று முன்தினம் திருத்தேரோட்டமும், அதனைத் தொடர்ந்து நேற்று பூமிதி விழாவும் நடைபெற்றது.

    பூமிதி விழாவில் கடந்த 15 தினங்களாக விரதமிருந்த பக்தர்கள் காவடி எடுத்து தீயில் இறங்கி நடந்தனர். அதனை தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.இதில் ஆவுடையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு செய்தனர்.

    • வாகன விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
    • மருத்துவமனையில் சிகிச்ைச பெற்று வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி கல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன்(27), கல்லூரி மாணவர் சேதுராமன்(22), தங்கராஜ்(55) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்பொழுது பின்புறமாக எம்.சாண்ட் மணல் ஏற்றிச்சென்ற லாரி சென்றுள்ளது.

    பின்னால் லாரி வருவதை கவனிக்க தவறிய இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் திடீரென பிரேக் அடித்து திரும்பியுள்ளனர். லாரி ஓட்டுனர் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் இரு சக்கர வாகனமீது மோதி விபத்தானது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர்.

    இதில் காயமடைந்தவர்கள் வலையபட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.இதுகுறித்து பொன்னமராவதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • சிறுவன் சாய் சிவாவின் பெற்றோரும் இசை மீது தணியாத ஆர்வம் கொண்டவர்கள் ஆவர்.
    • திருக்கல்யாணம் நடைபெற்றபோது பக்தர்கள் விண்ணை பிளக்க கோவிந்தா கோவிந்தா என கோசம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள், வரத விநாயகர், செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த கோவிலில் எந்த நிகழ்வும் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் சேந்தமங்கலம் கிராமத்தினர் ஒன்றுசேர்ந்து கோவிலை புதுப்பிக்க முடிவெடுத்தனர்.

    இந்நிலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த கோவில் கட்டும் பணி முடிந்து கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட பூமி நீளா சமேத பெருந்தேவி, வரதராஜ பெருமாள் என மூன்று தெய்வங்களும் அலங்கரிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் வளர்க்கப்பட்டு மாங்கல்யத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஒவ்வொரு தெய்வங்களுக்கும் மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

    மேலும் இந்த திருக்கல்யாணத்தில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பக்தி சிரத்தையுடன் பெருமாள் பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர். இதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சாய் சிவா என்ற 3 வயது சிறுவன் சிறுவர்களுடன் சேர்ந்து மிருதங்கம் வாசித்து தாளம் இசைத்து அசத்தியது திருக்கல்யாணத்தை பார்க்க வந்த பக்தர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    சிறுவன் சாய் சிவாவின் பெற்றோரும் இசை மீது தணியாத ஆர்வம் கொண்டவர்கள் ஆவர். அத்துடன் அவர்கள் மகன் பிறந்தது முதலே கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைத்து செல்வது, அங்கு இசைக்கப்படும் இசையை கேட்க செய்வது என்று பழகிக்கொடுத்து வந்துள்ளனர்.

    அதன் நீட்சியாக சாய் சிறுவன் தற்போது முதலே இசை ஆர்வம் கொண்டு திருவிழாக்களில் மிருதங்கம் வாசிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளான்.

    திருக்கல்யாணம் நடைபெற்றபோது பக்தர்கள் விண்ணை பிளக்க கோவிந்தா கோவிந்தா என கோசம் எழுப்பி திருக்கல்யாணத்தை பார்த்து ரசித்தனர்.

    • விராலிமலை சிங்கத்தாகுறிச்சியில் மாம்பாடி அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் சிங்கத்தாகுறிச்சியில் மாம்பாடி அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

    இதையடுத்து கோவிலில் 3 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 9.30 மணியளவில் யாகசாலை கூடத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட

    புனிதநீர் குடங்களை சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்தவாறு மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர்.

    பின்னர் வேதமந்திரங்கள் முழங்க மாம்பாடி அய்யனார் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    இதில் சிங்கத்தாகுறிச்சி, ஆட்டுக்காரன்பட்டி, வங்காரம்பட்டி, மாத்தூர், மண்டையூர், ஆவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை 3 கிராம பட்டையதாரர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலியானார்.
    • கழனிவாசல் கற்பக விநாயகர் கோவில் திடலில் சிவா உள்ளிட்ட 3 பேர் விளையாடிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக உயர் மின் அழுத்த கம்பி சென்றுகொண்டிருந்தது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கே.புதுப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் மகன் சிவா (வயது 18). இவர் அப்பகுதி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்தநிலையில் கழனிவாசல் கற்பக விநாயகர் கோவில் திடலில் சிவா உள்ளிட்ட 3 பேர் விளையாடிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக உயர் மின் அழுத்த கம்பி சென்றுகொண்டிருந்தது.

    அப்போது இடி, மின்னல் தாக்கியது. ஆனால் மழை பெய்யாமல் இருந்த நிலையில் அவர்கள் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதனால் 4 பேரும் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.

    இதில் படுகாயமடைந்த சிவாவை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சிவா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    • புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • கலெக்டர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    புதுக்ேகாட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 178 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.

    இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்காதல் தகராறில் பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • சத்யராஜ் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா நரங்கியப்பட்டு வைரவன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேம்பையன் மகன் சத்யராஜ் (வயது 36). இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    இதற்கிடையே தனது ஊரின் அருகாமையில் உள்ள மற்றொரு சமுதாயத்ச்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் 5 ஆண்டுகள் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்யராஜ் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் சத்யராஜை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இதனால் மனமுடைந்த சத்யராஜ் தனது வீட்டின் பின்புறம் உள்ள பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான மரத்தில் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தகவலறிந்த புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா, ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன் ஆகியோர் சத்யராஜின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி அளித்தனர்.

    இதைதொடர்ந்து கறம்பக்குடி போலீசார் சத்யராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    ×