என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "YOUNG MAN SUICIDE AFTER BEING ATTACKED BY RELATIVES"

    • கள்ளக்காதல் தகராறில் பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • சத்யராஜ் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா நரங்கியப்பட்டு வைரவன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேம்பையன் மகன் சத்யராஜ் (வயது 36). இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    இதற்கிடையே தனது ஊரின் அருகாமையில் உள்ள மற்றொரு சமுதாயத்ச்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் 5 ஆண்டுகள் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்யராஜ் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் சத்யராஜை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இதனால் மனமுடைந்த சத்யராஜ் தனது வீட்டின் பின்புறம் உள்ள பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான மரத்தில் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தகவலறிந்த புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா, ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன் ஆகியோர் சத்யராஜின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி அளித்தனர்.

    இதைதொடர்ந்து கறம்பக்குடி போலீசார் சத்யராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    ×