என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி"

    • மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலியானார்.
    • கழனிவாசல் கற்பக விநாயகர் கோவில் திடலில் சிவா உள்ளிட்ட 3 பேர் விளையாடிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக உயர் மின் அழுத்த கம்பி சென்றுகொண்டிருந்தது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கே.புதுப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் மகன் சிவா (வயது 18). இவர் அப்பகுதி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்தநிலையில் கழனிவாசல் கற்பக விநாயகர் கோவில் திடலில் சிவா உள்ளிட்ட 3 பேர் விளையாடிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக உயர் மின் அழுத்த கம்பி சென்றுகொண்டிருந்தது.

    அப்போது இடி, மின்னல் தாக்கியது. ஆனால் மழை பெய்யாமல் இருந்த நிலையில் அவர்கள் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதனால் 4 பேரும் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.

    இதில் படுகாயமடைந்த சிவாவை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சிவா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    ×