என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி திருவரங்குளம் அரங்குளநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா
- ஆலங்குடி திருவரங்குளம் அரங்குளநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா நடை பெற்றது.
- பின்னர் சுவாமி அம்பாள் பட்டாடை உடுத்தி தங்க வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் தெப்பகுளத்தில் எழுந்தருளினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளத்தில் அரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது.இதையடுத்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் சுவாமி அம்பாள் பட்டாடை உடுத்தி தங்க வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் தெப்பகுளத்தில் எழுந்தருளினார். மேள தாளம் முழங்க வாண வேடிக்கையுடன் எட்டு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி அம்பாள் மூன்று முறை தெப்பத்தில் சுற்றி வந்தனர்.
இதில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு கிராமிய நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாட்டை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.






