என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொற்பனை முனீஸ்வரருக்கு புஷ்பாபிஷேகம்"

    • பொற்பனை முனீஸ்வரருக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பூத்தட்டு எடுத்து பெண்கள் மேளதாளத்துடன் கோவிலுக்கு வந்தனர்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கும்மங்குளத்தில் பொற்பனை முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஈஸ்வரி அம்மன், காளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன. கோவிலில் கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.

    விழாவில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் தெம்மாங்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது. நேற்று வைகாசி விசாக சந்தன காப்பு விழா நடைபெற்றது.

    இதையொட்டி கும்மங்குளம் கிராம மக்கள், பெண்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாலையில் பெண்கள் பூத்தட்டு எடுப்பு நிகழ்ச்சியும் நடந்தது. கும்மங்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து மேளதாளம் முழங்க பெண்கள் பல்லாக்கு வைத்து பூத்தட்டு எடுத்து கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் பொற்பனை முனீஸ்வரருக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இளைஞர் மன்றம் மற்றும் மகளிர் மன்றம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர் திருவிழா 10 நாள் நேற்றுடன் முடிவு பெற்றது.


    ×