என் மலர்
நீங்கள் தேடியது "கோவில் தேரோட்டத்தில் 8 பெண்களிடம் 25 பவுன் நகை திருட்டு"
- கோவில் தேரோட்டத்தில் 8 பெண்களிடம் 25 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
- பல்லாயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றிருந்தனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் திருவிழா என்பதால் பல்லாயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றிருந்தனர்.
குறிப்பாக அதிகளவு பெண்கள் பங்கேற்றிருந்தனர். இந்த நிலையில் திருவிழா கூட்டத்தை பயன்படுத்திய திருடர்கள் பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றுள்ளனர். செயின் பறிக்கப்பட்டு சற்று நேரத்திற்கு பிறகு தான் தங்கள் செயின் பறிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து செய்வதறியாது தவித்த 8 பெண்கள் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பெண்கள் பறிகொடுத்த தங்கத்தின் மொத்த எடை 25 பவுன் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து விராலிமலை போலீசார் அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த சுமார்30 வயது மதிக்கத்தக ஒரு பெண்ணை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






