என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோலாகலமாக நடைபெற்ற விராலிமலை முருகன் கோவில் தேரோட்டம்"

    • விராலிமலை முருகன் கோவிலில் இன்று கோலாகலமாக தேரோட்டம் நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து இழத்து துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பிரசித்திபெற்ற முருகன் திருத்தலங்களில் ஒன்றான விராலிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருத்தலம் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது. இங்கு வருட வருடம் வைகாசி விசாக திருவிழாவானது கோலாகலமாக நடைபெறுவது வழக்கம், கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறாமலே இருந்தது.

    கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு வழக்கமான உற்சாகத்துடன் தேர்திருவிழாவானது தொடங்கியது. இந்த தேரினை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.விஜயபாஸ்கர் சாமி தரிசனம் செய்து தேரினை வடம் பிடித்து இழுத்து வைத்தார்.

    இந்த தேர் திருவிழாவில் இரண்டு தேர் வருவது வழக்கம் , முதல் தேரில் விநாயகரும் , இரண்டாவது தேரில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

    கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது, அன்று முதல் முருகன் வள்ளி தெய்வானையுடன் அலங்காரம் செய்யப்பட்டு தினந்தோறும் வீதிஉலா வந்தது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது, சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நாளை தெப்பத்திருவிழா விமர்சையாக நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்திருவிழாவிற்கு அ.தி.மு.க. சார்பில் அன்னதானம் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர் மோர், பானகம், பழங்கள் வழங்கப்பட்டது.

    தி.மு.க. இலக்கிய அணி தென்னலூர் பழனியப்பன், புதுக்கோட்டை ஆவின் சேர்மன் பழனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெபற்றனர்.

    ×