என் மலர்
நீங்கள் தேடியது "நிதி நிறுவன ஊழியரை வெட்டி கொலை செய்ய முயற்சி"
- நிதி நிறுவன ஊழியரை வெட்டி கொலை செய்ய முயன்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
- 3 ேபர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்
புதுக்கோட்டை:
பொன்னமராவதி வலையபட்டி 1நம்பர்ரோட்டில் வசித்து வரும் கணேசன் மகன் முத்துப்பாண்டி(வயது22). இவர் தனியார் பைனான்ஸ் கம்பேனியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர்,வேலைசம்மந்தமாக கோயில்பட்டியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது பொன்னமராவதி இந்திராநகரைச்சேரந்த சேட் மகன் நவாஸ்(24).காமராஜர்நகர்முருகன் மகன் ஹரி, தொட்டியம்பட்டி செல்வம் மகன் அழகர் ஆகிய மூவரும் முத்துப்பாண்டியிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது ஆத்திரடமடைந்த அவர்கள் முத்துபாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தாங்கள் வைத்திருந்த கத்தியால் தலை, கை, கால்களில் வெட்டியுள்ளனர்.
இதில் பலத்தகாயமடைந்த முத்துப்பாண்டி வலையபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வந்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற 3பேரை வலை வீசி தேடிவருகின்றனர். இதில் நவாஸ் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






