என் மலர்
நீங்கள் தேடியது "ELDERLY MAN DROWNS IN POOL"
- வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் பணிகள்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நாரணமங்கலம் ஊராட்சியில் ரூ.8.98 லட்சம் மதிப்பீட்டில் நாற்றாங்கால் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும், ரூ.6.33 லட்சம் மதிப்பீட்டில் நாரணமங்கலம் முதல் காரை பிரிவு ரோடு வரை 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை புதுப்பிக்கும் பணியினையும்,
ரூ.8.43 லட்சம் மதிப்பீட்டில் மருதடி மலை முதல் கல்லுக்கட்டி ஏரி வரை 1.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை புதுப்பிக்கும் பணியினையும், ரூ.9.48 லட்சம் மதிப்பீட்டில் சிறுவாச்சூர் வரை பிரிவு வாய்க்கால் புதுப்பித்தல் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
- குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்
- குளிக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 75). இவர் அப்பகுதியில் உள்ள மலையடி குளத்தில் குளிக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை தேடி மலையடி குளத்திற்கு சென்றனர். அங்கு ஆரோக்கியசாமி நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நமணசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆரோக்கியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்






