என் மலர்
நீங்கள் தேடியது "RESOLUTION TO SET UP QUOTIENT OFFICE"
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு நடைபெற்றது
- மாநாட்டில் பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தவேண்டும். பொன்னமராவதியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்கவேண்டும். பொன்னமராவதி வட்டம் முழுவதும் விவசாய நீர்நிலைகள் தூர்வாரப்படவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுக்கோட்டை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னமராவதி ஒன்றிய மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினருமான ந.பெரியசாமி கலந்து கொண்டு பேசினார்.
மாநாட்டில் பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தவேண்டும். பொன்னமராவதியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்கவேண்டும். பொன்னமராவதி வட்டம் முழுவதும் விவசாய நீர்நிலைகள் தூர்வாரப்படவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏனாதி ஏஎல்.ராசு, கேஆர்.தர்மராஜன், முன்னாள் மாவட்டச்செயலர் த.செங்கோடன்மாவட்ட பொருளர் பி.திருநாவுக்கரசு ஆகியோர் பேசினர். ஒன்றிய செயலர் ப.செல்வம் நன்றி கூறினார்.






