என் மலர்
நீங்கள் தேடியது "VISION IN PERSON IN ANGANWADI SCHOOLS"
- அங்கன்வாடி பள்ளிகளில் திடீர் ஆய்வு நடைபெற்றது.
- குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு சுவையாக உள்ளதா என ஆய்வு நடந்தது
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கந்தர்வகோட்டை ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர், கொத்த கம் பகுதிகளில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களை ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக் மழவராயர் ஆய்வு செய்தார்.
அப்பொழுது அங்கன்வாடி மையங்களில் உணவு சமைக்கும் இடங்களை பார்வையிட்டு சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் உள்ளதா என சாப்பிட்டு பார்த்து தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது ஒன்றியக் குழுத் தலைவருடன்மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் உடனிருந்தார்.






