என் மலர்
நீங்கள் தேடியது "ENTER THE HOUSE AND ROBBERY JEWELRY"
- வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
- தனியாக இருந்த பெண்ணிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பகுடி அருகே மழையூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் ஷேக்முகமது மனைவி பாத்திமா பேகம்(வயது29). இவர் நேற்று வீட்டில் மதியம் தனியாக உறங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்கம் சத்தம் கேட்டுள்ளது.
என்வென்று பார்க்க போனபோது அங்கு மறைந்திருந்த 3 மர்ம நபர்கள், பாத்திமா பேகம் கழுத்தில் அணிந்திருந்த ஏழரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து பாத்திமா பேகம் கொடுத்த புகாரின் ேபரில் மழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற மூன்று பேரை தேடி வருகின்றனர்.






