என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமைப்பதற்கு முன்பாக அயிரை மீன் குஞ்சுகளுக்கு பால் ஊற்றப்பட்டு இருக்கும் காட்சி.
வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுவை தர அயிரை மீன்களுக்கு தேங்காய் பால் கொடுக்கும் தனியார் உணவகம்
- பொதுவாகவே அம்மை நோயை குணமாக்கும் தன்மை அயிரை மீனுக்கு உண்டு என்பதால் உணவகத்தினர் அதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
- தற்போது உள்ள விலைவாசி உயர்வில் கிடைக்கும் மீன்களை விற்பனை செய்துவிட்டு போகாமல் வாடிக்கையாளர்களின் திருப்தி என்பதையே நோக்கமாக கொண்டு உணவக உரிமையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் எதிரே தனியாருக்கு சொந்தமான அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வழங்கப்படும் உணவு வகைகளின் சுவைக்கு கட்டுப்பட்ட பலர் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருந்து வருகிறார்கள். அவர்களை திருப்திப்படுத்தவும், கூடுதல் சுவை தரவும் இங்கு சமைக்கப்படும் அயிரை மீன் குஞ்சுகளுக்கு தேங்காய் பால் கொடுக்கின்றனர்.
கூடுதல் வேலை, கூடுதல் செலவு என்றாலும் வாடிக்கையாளர்களின் திருப்தியே தங்களுக்கு முக்கியம் என்கிறார்கள் அதன் உரிமையாளர்கள். பசியோடு வருபவர்கள் ருசியோடு சாப்பிடும் வகையில் பல்வேறு உணவு அயிட்டங்களை வழங்கி வருகின்றனர்.
இருப்பதிலேயே கடல் வாழ் உயிரினங்களை உண்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் குளங்களில் பிடிக்கப்படும் அயிரை மீன் குஞ்சுகளை வாங்கி அவற்றிற்கு தேங்காய் பால் கொடுத்து ஊற வைத்து அந்த மீன்கள் நன்றாக குடித்தபின் அவற்றை பக்குவமாக சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.
பொதுவாகவே அம்மை நோயை குணமாக்கும் தன்மை இந்த அயிரை மீனுக்கு உண்டு என்பதால் உணவகத்தினர் அதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
இதை சாப்பிடுவதற்காகவே தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே இந்த மீன்கள் கிடைக்கின்றன. தற்போது உள்ள விலைவாசி உயர்வில் கிடைக்கும் மீன்களை விற்பனை செய்துவிட்டு போகாமல் வாடிக்கையாளர்களின் திருப்தி என்பதையே நோக்கமாக கொண்டு உணவக உரிமையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் மீன் வகைகளில் வஞ்சிரம், சீலா, காரை, மூக்குமீன் என பலவகைகளும் இங்கு கிடைக்கிறது. புதுக்கோட்டைக்கு பெயர் போன முட்டை மாஸ் வகைகளும் வழங்கப்படுகிறது. பொடி மாஸ், பெருவெட்டு மாஸ், லாப்பா, கோல்டன் மாஸ் என பல வகை உணவுகளை செய்து கொடுக்கிறார்கள்.






