என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ்காரர் கையை பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சி"
- போலீஸ்காரர் தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
- சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
புதுக்கோட்டை:
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ், இவர் கடந்த 2011ம் ஆண்டு காவல்த்துறையில், காவலராக பணியில் சேர்ந்துள்ளார். அதிலிருந்து பணிமாறுதல் காரணமாக ஒவ்வொரு மாவட்டங்களாக பணியாற்றி வந்த அவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டைக்கு பணி மாறுதல் அடைந்து அங்கு பணியாற்றி வந்துள்ளார்.
மேலும் புதுப்பட்டி, கோட்டைப்பட்டினம் ஆகிய இடங்களில் பணியாற்றி வந்த அவர் தற்போது அறந்தாங்கி காவல் நிலையத்தில் காவல்த்துணை கண்காணிப்பாளருக்கு ஓட்டுனராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவர், சட்ட விரோதமாக தொழில் செய்பவர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களிடமிருந்து பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்தீபன் உத்தரவின் பெயரில் அரியலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதில் மன உலைச்சலுக்கு ஆளான ரமேஷ் தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த அவரது மனைவி உடனடியாக அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்பு வீடடிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். பணி மாறுதல் காரணமாக தற்கொலைக்கு முயன்ற காவலரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






