என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் - முதன்மை கல்வி அதிகாரி வேண்டுகோள்
    X

    அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் - முதன்மை கல்வி அதிகாரி வேண்டுகோள்

    • அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
    • எண்ணும் எழுத்தும் இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் இயக்க மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான 5 நாள் பயிற்சி நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

    மாணவர்கள் கல்வியை சுமையாக கருதாமல் சுகமாக கருத வேண்டும். மாணவர்களிடம் இருக்கும் நேரத்தை ஆசிரியர்கள் பயனுள்ள வகையில் செலவிட வேண்டும்.பயிற்சிக்கு ஆசிரியர்கள் சந்தோசமாக வரவேண்டு ம். அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களை தக்க வைக்க வேண்டும்.

    மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்.பயிற்சியில் ஆசிரியர்கள் ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்களுடைய கற்பித்தல் முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

    Next Story
    ×