என் மலர்
புதுக்கோட்டை
- பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சுதாஅடைக்கலமணி மற்றும் துணைத்தலைவர் தனலட்சுமி அழகப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்
புதுக்கோட்டை :
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சுதாஅடைக்கலமணி மற்றும் துணைத்தலைவர் தனலட்சுமி அழகப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜூ முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சிவரஞ்சனி, பிரியங்கா, பழனியப்பன், வளர்மதி, பழனியாண்டி, ஆதிலட்சுமி, முருகேசன், மாணிக்கம், அடைக்கலமணி, அழகுரத்தினம், கல்யாணி, செந்தில் விஜயா, பழனிச்சாமி உள்ளிட்டோர் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒன்றிய குழு உறுப்பினர்கள் விவாதித்தனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பத்து ஆண்டுகளாக துரைசாமி என்பவர் அரசு வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து எந்த ஒரு விபத்துகளும் இல்லாமல் நல்ல முறையில் வாகனத்தை இயக்கி பராமரித்து வந்ததற்காக ரூ.500 ஊக்கத்தொகையை தமிழக அரசின் சார்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி சேர்மன் சுதா அடைக்கலமணி ஆகியோர் துரைசாமியிடம் வழங்கினர். ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா அன்று துரைசாமி மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவிடம் சிறந்த ஓட்டுநருக்கான சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பொன்னமராவதியில் பொதுமக்கள் கண் தானம் செய்ய வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
- பேரணியை பார்வைக்கு ஒரு பயணம் மாவட்டத் தலைவர் எம்.ஜி.ஆர்.விஜயலட்சுமி சண்முகவேல் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்தியநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
புதுக்கோட்டை :
பொன்னமராவதியில் உள்ள அனைத்து லயன்ஸ் சங்கங்கள் சார்பாக பொதுமக்கள் கண் தானம் செய்ய வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு பொன்னமராவதி லயன் சங்க தலைவர் பொறியாளர் வி.என்.ஆர்.நாகராஜன் தலைமை தாங்கினார். சிட்டி லைன் சங்க தலைவர் ஆர்.சுந்தர்ராஜன், ஆர். பொன்னமராவதி ராயல் லயன் சங்க தலைவர் எம்.முருகானந்தம், பாலக்குறிச்சி பிரைட் லைன் சங்கதலைவர் எஸ்.ராஜேந்திரன், கொப்பனாபட்டி சைன் லயன் சங்கத் தலைவர் வி.கிரிதரன், பொன்னமராவதி ஷைன் லைன் சங்கத் தலைவர் பி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.பேரணியை பார்வைக்கு ஒரு பயணம் மாவட்டத் தலைவர் எம்.ஜி.ஆர்.விஜயலட்சுமி சண்முகவேல் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்தியநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் மண்டல தலைவர் சிங்காரம், வட்டாரத் தலைவர்கள் ஆர்.எம்.வெள்ளைச்சாமி மற்றும் அன்பு செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பொன்புதுப்பட்டி செங்கை ஊரணியில் இருந்து புறப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணி வலையபட்டி, நகைக்கடை பஜார், அண்ணா சாலை வழியாக கொப்பனாபட்டியில் பேரணி நிறைவுற்றது. பேரணிகள் சென்ற லயன் சங்க நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் கண் தானம் விழிப்புணர்வு பதாகைகளை கட்டிக்கொண்டு சென்றனர். மேலும் பேரணியின் முன்பாக ஆட்டோவில் ஒலிபெருக்கியின் மூலமாக செய்வோம் செய்வோம் கண் தானம் செய்வோம், மனிதன் இருக்கும் பொழுது ரத்த தானம் இறந்த போது கண் தானம் மண்ணில் புதையும் கண்களை பிறருக்கு தானமாக தானம் செய்வோம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு பற்றி லயன் சங்க ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி விரிவாக பேசினார். முடிவில் கொப்பனாபட்டி கலைமகள் கல்லூரியின் தலைமை ஆசிரியர் மா.முல்லை நன்றி கூறினார்.
- வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பட்டமரத்தான் நகர் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 75). இவரது மனைவி தெய்வானை. இவர்கள் இருவர் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களின் மகன் சங்கர் (32) திருமணமாகி லண்டனிலும், மகள் உமா காஞ்சிபுரத்திலும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் காசிநாதன் தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டை பூட்டி விட்டு திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இன்று காலை அழைத்து சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன் பக்க கதவு மட்டும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பின்னர் அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த 2 பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை மர் ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து காசிநாதன் பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- கறம்பக்குடியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது
- அக்கினி ஆற்றுக்கு புறப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக கறம்பக்குடி முழுவதும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் ஒரே இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக அக்கினி ஆற்றுக்கு புறப்பட்டது.
நிகழ்ச்சி தலைமை மாவட்ட செயலாளர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் காசிகண்ணன் வரவேற்று பேசினார். மாநில பா.ஜ.க. பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில விளையாட்டு திறன்மேம்பாட்டு பிரிவு செயலாளர் ந.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் கறம்பக்குடி பா.ஜ.க. வடக்கு ஒன்றிய தலைவர் இருக்களவிடுதி பாலசுப்பிரமணியன், பா.ஜ.க. தெற்கு ஒன்றிய தலைவர் சேசு.மாரிமுத்து மற்றும் களக்கடிப்பட்டி சந்திரன், ஆனந்தராஜ், முருகையன், சின்னக்குழந்தை, ஆட்டோரவி அசோக்குமார், ஜெயபால், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
- மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கீழச்சேரிகொடுகவயல் மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அறந்தாங்கி தாலுகா கீழச்சேரி கொடுகவயல் கிராமத்தில் அமைந்து அருள்பாளித்துவரும் ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, அப்பகுதி மக்கள் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இதற்காக யாகசாலை அமைத்து கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நான்குகால யாகபூஜை நடைபெற்றது.விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.
கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து சிவக்குமார் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீ மாணிக்க விநாயகர் அருள்பெற்று சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- 3 மாதங்களில் 33 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
- ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா, நாணயக் கண்காட்சி மற்றும் கலை இலக்கிய நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
33 குழந்தை திருமணங்கள்
இவ்விழாவில் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தின் தலைவர் கே.சதாசிவம் பேசியதாவது:
குழந்தை திருமணம், குழந்தை கடத்தல், பிச்சை எடுத்தல், பள்ளியில் இருந்து இடைநிற்றல் போன்ற சிறுமிகளுக்கு எதிரான அநீதிகள் தடுக்கப்பட வேண்டும். அதற்கான பணிகளையும், அவர்களுக்கான மறுவாழ்வு பணிகளையும் அரசு செய்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 33 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. நம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் பொன்னமராவதி, விராலிமலை, அன்னவாசல், அறந்தாங்கி உள்ளிட்ட வட்டாரங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமணங்கள் நடப்பதாக, குழந்தைகள் பாதுகாப்புக்கான கட்டணமில்லா எண் 1098-க்கு புகார்கள் வருகின்றன.
விழிப்புணர்வு
மாவட்டம் முழுவதும் மாணவ, மாணவிகளிடையே ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதோடு, அத்தகைய குற்ற ங்களில் ஈடுபடுவோர் மீதான அரசின் நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தல் தேவைப்படுகிறது. பொதுவாக 13-ல் இருந்து 19-வயது வரை கல்வியை தவிர வேறு எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல், கவனச்சிதறல்களுக்கு ஆளாகாமல் மாணவிகள் இருக்க வேண்டும். சிறுமிகளுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் 1098- எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்போரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கியராஜ் தலைமயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜானகி, கிராம நிர்வாக அலுவலர் ராஜா, அறிவொளி கருப்பையா, அறிவியல் இயக்க நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனனர்.
- ரூ.100க்கு ஆசைப்பட்டு ரூ.8 லட்சத்தை இளம் பெண் இழந்தார்
- எச்சரிக்கையுடன் இருக்க புதுக்கோட்டை போலீசார் அறிவுறுத்தல்
புதுக்கோட்டை.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டை பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் மனைவி சிந்து(வயது25). இவரது செல்போனுக்கு ஆன்லைனில் வேலை பர்த்தால் கூடுதல் பணம் சம்பாதிக்காலாம் என்று ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனை நம்பிய சிந்து, அவர்கள் கூறியபடி முதல் தவணையாக ரூ.200 செலுத்தியுள்ளார். அதற்கு ரூ.300 அனுப்பியுள்ளனர். 200 ரூபாய்க்கு 100 கூடுதலாக கொடுத்திருப்பதால் பணத்திற்கு ஆசைபட்டு 43 தவணைகளில் ரூ.8லட்சத்து 5ஆயிரத்து ஐம்பத்துஒன்று முதலீடு செய்துள்ளார்.
ஆனால் எந்த பணமும் திரும்பி வராத காரணத்தினால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிந்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலிசாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றர். போலீசார் பலமுறை எச்சரித்தும் ஆன்லைனில் இதுபோன்று வரும் தவறான தகவல்களை கொண்டு பணம் பறிமாட்டம் நடத்தவேண்டாம் என கேட்டுக் கொண்டாலும், பணத்திற்கு ஆசைப்பட்டு தொடர்ந்து ஏமாறி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே இதுபோன்ற செல்போன்களில் வரும் தகவல்களை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடவேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
- வயிற்றுவலியால் அவதிபட்டு வந்தார்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள வாராப்பூர் கரையாபட்டி சின்னப்பா மகன் மகேஸ்வரன் (வயது 44) இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், மனவிரக்தியில் கடந்த மாதம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார் . அப்போது அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேஸ்வரன் இறந்து விட்டார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து சப்-இன் ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- வலம்புரி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது
- சிறப்பு அன்னதானம் நடைபெற்றது
புதுக்கோட்டை:
ஆலங்குடி படேல் நகரில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜையில்கலந்துகொண்டனர். திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி கயிறு முதலியன கோவில் நிர்வாகிகள் வழங்கினர். சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த முத்து மாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
விநாயகரை தரிசிக்கவும், பூஜைகளுக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
- மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இரட்டை தேரோட்டம் நடந்தது
- முக்கிய வீதிகளில் வலம் வந்து தேரடியில் நிலையை அடைந்தது.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இரட்டைத் தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 27-ந்தேதி காப்புக் கட்டப்பட்டு தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து இரட்டை தேரோட்ட விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு பின் ஒரு தேரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், மற்றொரு தேரில் பிடாரி அம்மன் எழுந்தருளிய பின் பக்தர்கள் வடம் பிடிக்க முக்கிய வீதிகளில் வலம் வந்து தேரடியில் நிலையை அடைந்தது.விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல்துறையினர் செய்திருந்தனர்.
- ஆலங்குடி மருத்துவமனையில் பாம்புகள் தொல்லை உள்ளது
- செடி கொடிகளை அகற்ற வேண்டும்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 75 படுக்கைகளுடன் அனைத்து வசதிகளும் உள்ள இந்த மருத்துவ மனையில் பாம்புகள் நுழைந்து அவ்வப்போது நோயாளிகளை மிரட்டி வருவதாக மருத்துவமனைக்கு வரும் மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். எனவேமருத்துவமனை வளாகத்தில் உள்ள அதிகமான செடி கொடிகளை அகற்றி தூய்மையாக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைததுள்ள்ளனர்.
- புதுக்கோட்டைைய கலக்கும் மதநல்லிணக்க விழாக்கள்
- கோவில் கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர்கள் சீர் வரிசை
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து கோவில் கும்பாபிஷேகத்திற்கு முஸ்லிம்கள் சீர்வரிசை கொண்டு சென்றது போல் பள்ளிவாசலுக்கு இ்ந்துக்கள் சீர்வரிசை கொண்டு சென்ற நிகழ்வு மதநல்லிணக்கத்தை வலுப்படுத்துவதாக இருந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள பட்டவைய்யனார் கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து இன்று (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 5 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்து வருகிறது. கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதில் அமைச்சர் மெய்யநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் நேற்று மாலை கீரமங்கலம் மேற்கு முஸ்லிம் பேட்டை ஜமாத்தார்கள் பள்ளிவாசலில் இருந்து காய், கனி, பட்டு உள்ளிட்ட ஏராளமான தட்டுகளுடன் நாட்டிய குதிரைகளின் ஆட்டம், மேள தாளம், வாண வேடிக்கைகளுடன் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சீர்வரிசை கொண்டு வந்தனர். கோவில் வளாகத்தில் அவர்களுக்கு மாலை அணிவித்து சந்தனம், கற்கண்டு கொடுத்து வரவேற்றனர்.
இதேபோன்று காசிம்புதுப்பேட்டை ஜமாத்திலிருந்தும் சீர்வரிசை கொண்டு வந்தனர். கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் சீர்வரிசைகள் கொண்டு வந்தனர்.
இதேபோல் பொன்னமராவதி அருகே கேசராபட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், கேசராபட்டியை ேசர்ந்த இந்துக்கள் பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக பள்ளிவாசலுக்கு எடுத்து சென்றனர். அவர்களை இஸ்லாமியர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்






