search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண் தான விழிப்புணர்வு  குறித்து மோட்டார் சைக்கிள் பேரணி
    X

    கண் தான விழிப்புணர்வு குறித்து மோட்டார் சைக்கிள் பேரணி

    • பொன்னமராவதியில் பொதுமக்கள் கண் தானம் செய்ய வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
    • பேரணியை பார்வைக்கு ஒரு பயணம் மாவட்டத் தலைவர் எம்.ஜி.ஆர்.விஜயலட்சுமி சண்முகவேல் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்தியநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    புதுக்கோட்டை :

    பொன்னமராவதியில் உள்ள அனைத்து லயன்ஸ் சங்கங்கள் சார்பாக பொதுமக்கள் கண் தானம் செய்ய வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு பொன்னமராவதி லயன் சங்க தலைவர் பொறியாளர் வி.என்.ஆர்.நாகராஜன் தலைமை தாங்கினார். சிட்டி லைன் சங்க தலைவர் ஆர்.சுந்தர்ராஜன், ஆர். பொன்னமராவதி ராயல் லயன் சங்க தலைவர் எம்.முருகானந்தம், பாலக்குறிச்சி பிரைட் லைன் சங்கதலைவர் எஸ்.ராஜேந்திரன், கொப்பனாபட்டி சைன் லயன் சங்கத் தலைவர் வி.கிரிதரன், பொன்னமராவதி ஷைன் லைன் சங்கத் தலைவர் பி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.பேரணியை பார்வைக்கு ஒரு பயணம் மாவட்டத் தலைவர் எம்.ஜி.ஆர்.விஜயலட்சுமி சண்முகவேல் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்தியநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் மண்டல தலைவர் சிங்காரம், வட்டாரத் தலைவர்கள் ஆர்.எம்.வெள்ளைச்சாமி மற்றும் அன்பு செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    பொன்புதுப்பட்டி செங்கை ஊரணியில் இருந்து புறப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணி வலையபட்டி, நகைக்கடை பஜார், அண்ணா சாலை வழியாக கொப்பனாபட்டியில் பேரணி நிறைவுற்றது. பேரணிகள் சென்ற லயன் சங்க நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் கண் தானம் விழிப்புணர்வு பதாகைகளை கட்டிக்கொண்டு சென்றனர். மேலும் பேரணியின் முன்பாக ஆட்டோவில் ஒலிபெருக்கியின் மூலமாக செய்வோம் செய்வோம் கண் தானம் செய்வோம், மனிதன் இருக்கும் பொழுது ரத்த தானம் இறந்த போது கண் தானம் மண்ணில் புதையும் கண்களை பிறருக்கு தானமாக தானம் செய்வோம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு பற்றி லயன் சங்க ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி விரிவாக பேசினார். முடிவில் கொப்பனாபட்டி கலைமகள் கல்லூரியின் தலைமை ஆசிரியர் மா.முல்லை நன்றி கூறினார்.

    Next Story
    ×