தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் வயிற்றுவலியால் அவதிபட்டு வந்தார்
தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Published on

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே உள்ள வாராப்பூர் கரையாபட்டி சின்னப்பா மகன் மகேஸ்வரன் (வயது 44) இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், மனவிரக்தியில் கடந்த மாதம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார் . அப்போது அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேஸ்வரன் இறந்து விட்டார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து சப்-இன் ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com