என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக விஜய் வசந்த் நியமனம்
    X

    பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக விஜய் வசந்த் நியமனம்

    • விஜய் வசந்த் வெளியிட்ட பேஸ்புக் பதிவு.
    • சமூக வலைதலத்தில் விஜய் வசந்த் நன்றி.

    புதுடெல்லி:

    நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக விஜய்வசந்த் எம்பியை நியமித்து சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தி நேற்று கட்சியின் நாடாளுமன்ற செயலாளர்கள் மற்றும் பொருளாளர் ஆகியோரை நியமித்தார்.

    ரஞ்சித் ரஞ்சன் மாநிலங்களவை செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், எம்.கே. ராகவன் மற்றும் அமர் சிங் ஆகியோர் மக்களவை செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக தமிழ்நாட்டை சேர்ந்த கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து விஜய் வசந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    அன்னை சோனியா காந்திக்கும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும். மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கும், தலைவி பிரியங்கா காந்திக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாகவும் இந்த மாவட்டத்தின் காங்கிரஸ் நண்பர்கள் அனைவர் சார்பிலும் எனது நன்றி.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×