என் மலர்
நீலகிரி
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி என பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இவை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவதையும், அங்குள்ள பொருட்களை தின்பதும், சேதப்படுத்துவததையும் வழக்கமாக வைத்துள்ளது.
குன்னூர் பகுதியில் அண்மைக்காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. தேயிலை தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் கரடிகள் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், குன்னூர், சேலாஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்குள் கரடி ஒன்று புகுந்தது.
கரடி அங்கிருந்த உணவுப் பண்டங்களை எடுத்து சாப்பிட்டும், வெளியில் வீசி விட்டு சிறிது நேரம் அங்கேயே சுற்றி திரிந்தது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டது. இதுகுறித்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
வனத்துறையினர் விரைந்து வந்து பள்ளியின் அருகே கரடி நடமாட்டம் இருக்கிறதா என ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.பள்ளிக்குள் கரடி புகுந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கொலக்கெம்பை பகுதியில் உள்ள உணவு கடையிலும் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது.
சமீபகாலமாக பகல், இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகள், தேயிலைத் தோட்டங்கள், சாலைகள் போன்ற பகுதிகளில் கரடி, காட்டு மாடு, சிறுத்தை, யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உலவி வருவது வாடிக்கையாக உள்ளது.
சில நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடும் வனவிலங்குகள், விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளன.
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் அருகே உள்ள காந்தி நகர் பகுதியில் 2 புலிகள் உலா வந்ததுள்ளது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.
ஒரே இடத்தில் 2 புலிகள் உலா வந்தது அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, உடனடியாக அப்பகுதியில் முகாமிட்டுள்ள புலிகளை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும். அல்லது மயக்க ஊசி செலுத்திப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா தொற்றின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
மேலும் சுற்றுலா தலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்தது. இதனால் நீலகிரிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
தொற்று குறைந்ததை அடுத்து கடந்த 27-ந் தேதியில் இருந்து ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது.
ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதாலும், சுற்றுலா தலங்கள் பார்வையிடுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியது.
குறிப்பாக வார இறுதி நாளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இந்த வாரமும் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகமாகவே இருந்தது. நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார், வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை 3,700 பேர் வந்திருந்த நிலையில் நேற்று 5,300 பேர் வந்திருந்தனர்.
அதேபோல, ஊட்டி அரசினர் ரோஜா பூங்காவுக்கு சனிக்கிழமை சுமார் 1,000 பேரும், நேற்று 1,500 பேரும் வந்திருந்தனர்.
குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு நேற்றுமுன்தினம் 900 பேரும், நேற்று 1,400 பேர் வந்திருந்தனர். தவிர தொட்டபெட்டா தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, காட்டேரி பூங்கா, கல்லார் பழப்பண்ணை உள்ளிட்ட தோட்டக்கலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா மையங்களிலும், ஊட்டி மற்றும் பைக்காரா படகு இல்லம், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.






