என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கூடலூர் வனக்கோட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு

    கூடலூர் வனக்கோட்டத்தில் 4 ஆண்டுக்கு பிறகு வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் ஓவேலி, நாடுகாணி, கூடலூர், தேவாலா, சேரம்பாடி, பிதிர்காடு உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளது. இங்கு காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் விலை உயர்ந்த மரங்கள் உள்ளன.

    கேரளா மற்றும் முதுமலை புலிகள் காப்பக எல்லையில் அமைந்து உள்ளதால் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    முதுமலையில் ஆண்டுக்கு 2 முறை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடக் கிறது. ஆனால் கூடலூர் வனக் கோட்டத்தில் 4 ஆண்டுக்கு ஒருமுறை வனவிலங்கு கள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடைபெற்றது.

    இந்த நிலையில் 2022-ம் ஆண்டுக்கான வனவிலங்கு கள்கணக்கெடுப்பு இன்று தொடங்கி வருகிற 14-&ந்தேதி வரை நடக்கிறது. இந்த பணியில் தினமும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வன ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.முன்னதாக வனவிலங்கு கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வன ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம், நாடுகாணி தாவரவியல் சூழல் மேம்பாட்டு பூங்கா அரங்கில் நடைபெற்றது. முகாமில் வனச்சரகர்கள் கணேசன், ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    அப்போது வனவிலங்கு கள் கணக்கெடுப்பு பணியில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், நேரில் பார்த்தல், கால் தடங்கள், எச்சங்களை கொண்டு கணக்கெடுத்தல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் உள்ளிட்ட வன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து வனச்சரகர் கணேசன் கூறும்போது, கூடலூர் வனக்கோட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வனவிலங்குகள் கணக்கெடுக் கப்பட்டு வருகிறது. ஒரு வாரம் நடைபெறும் கணக்கெடுப்பின் இறுதி நாளில் வன விலங்குகள் குறித்த தகவல்கள் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனரிடம் துறை ரீதியாக சமர்ப்பிக்கப்படும் என்றார்.
    Next Story
    ×