என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
நீலகிரியில் அ.தி.மு.க., நாம்தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 22 பேரின் மனுக்கள் தள்ளுபடி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டு கள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது. ஊட்டி உள்பட 4 நகராட்சிகளில் 601 பேர், 11 பேரூராட்சிகளில் 781 பேர் என மொத்தம் 1,382 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. ஊட்டி நகராட்சியில் 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தனித்தனியாக வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களை பரிசீலனை செய்தனர்.
ஊட்டி நகராட்சி 2-&வது வார்டில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளர் உஷாராணி வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் போட்டியிடும் வார்டு இல்லாமல் வேறு வார்டில் உள்ள நபர் முன்மொழிந்ததால், அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
நாம்தமிழர்கட்சி வேட்பாளர்கள் 2 பேரின் வேட்புமனுக்கள் வைப்பு தொகை மாற்றி செலுத்தியதால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் கட்சியினர் சம்பந்தப் பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி நகராட்சியில் 9 வேட்பு மனுக்கள், குன்னூர் நகராட்சியில் 1, நெல்லியாளம் நகராட்சியில் 3 என 4 நகராட்சிகளில் 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
பிக்கட்டி பேரூராட்சியில் 1, உலிக்கல் பேரூராட்சியில் 1, ஜெகதளா பேரூராட்சியில் 2, கேத்தி பே ரூராட்சியில் 1, கோத்தகிரி பேரூராட்சியில் 1, ஓவேலி பேரூராட்சியில் 3 என 11 பேரூராட்சிகளில் 9 வேட்புமனுக்கள் தள்ளுபடியானது. மொத்தம் 22 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஊட்டி நகராட்சியில் 203, குன்னூர் நகராட்சியில் 145, கூடலூர் நகராட்சியில் 121, நெல்லியாளம் நகராட்சியில் 119 என மொத்தம் 588 பேர், அதிகரட்டி பேரூரா ட்சியில் 76, பிக்கட்டி பேரூராட்சியில் 52, தேவர்சோலை பேரூ ராட்சியில் 78,
உலிக்கல் பேரூராட்சியில் 75, ஜெகதளா பேரூராட்சியில் 69, கேத்தி பேரூராட்சியில் 75, கீழ்குந்தா பேரூராட்சியில் 59, கோத்தகிரி பேரூராட்சியில் 125, நடுவட்டம் பேரூராட்சியில் 46, ஓவேலி பேரூராட்சியில் 65, சோலூர் பேரூராட்சியில் 52 என 772 பேர் என மொத்தம் 1,360 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. நாளை (திங்கட்கிழமை) மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். அதைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது
Next Story






