என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலில் பிளாஸ்டிக் வளையத்துடன் சுற்றிய காட்டுபன்றி
    X
    காலில் பிளாஸ்டிக் வளையத்துடன் சுற்றிய காட்டுபன்றி

    மஞ்சூரில் காலில் பிளாஸ்டிக் வளையத்துடன் சுற்றிய காட்டுபன்றி

    வனத்துறையினர் மீட்டு, சிகிச்சை அளித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் அனைத்து பொருட்களும் வாங்க மஞ்சூர் பஜார் பகுதிக்கு தான் வருவார்கள்.கடந்த சில மாதங்களாக காட்டுபன்றிகளின் நடமாட்டம் இந்த பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது. சுமார் 100 முதல் 200க்கும் அதிகமான காட்டுப்பன்றிகள் பகல் நேரங்களிலேயே பஜார் பகுதியில் சுற்றி வருகிறது. 

    இவை அங்கு கொட்டக் கூடிய கோழிக்கழிவுகள், குப்பை தொட்டிகளில் வீசக் கூடிய உணவு வகைகளை தின்று விட்டு வனத்திற்குள் செல்லாமல் சாலையோரங்களிலேயே ஒய்வெடுக்கின்றன.சாலைகளில் சுற்றி திரிந்தாலும் அவை மக்களும் எந்தவித தொந்தரவு கொடுப்பதில்லை. இதனால் மக்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பஜாரில் சுற்றி திரிந்த காட்டுபன்றி ஒன்று அங்குள்ள குப்பை தொட்டியில் இருந்த பொருட்களை தின்று கொண்டி ருந்தது. அப்போது எதிர் பாராத விதமாக குப்பை தொட்டி யில் இருந்த பிளாஸ்டிக் காட்டுப்பன்றியின் காலில் சிக்கி கொண்டது. இதனால் அந்த பன்றி நடக்க முடியாமல் மிகவும் சிரமம் அடைந்ததுடன், சாலையோரம் படுத்து கிடந்தது. 

    இதுபற்றிய தகவல் அறிந்த தும், வனவர் அர்ஜூனன் தலைமையில் வன பணியாளர் தர்மராஜ், ஆர்.ஆர் டீம்மை சேர்ந்த கோவிந்தன், யோகராஜ் ஆகி யோர் இணைந்து காட்டுப் பன்றியின் கால்களில் மாட்டியிருந்த வளையத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.காட்டுப்பன்றியை பிளாஸ்டிக் போர்வை போர்த்தி பிடித்து, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு காலில் மாட்டியிருந்த வளையத்தை அகற்றி, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்திலேயே காட்டுப்பன்றியை விட்டனர்.
    Next Story
    ×