என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆய்வு
நீலகிரியில் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சியில் நடந்தது.
மஞ்சூர்:-
நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா மற்றும் பிக்கட்டி பேரூராட்சிகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19&ந் தேதி நடக்கிறது. இவ்விரு பேரூராட்சிகளி லும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்தவுடன் மேற்படி பேரூராட்சிகளில் இருந்து மின்னணு வாக்கு எந்திரங்கள் சீலிடப்பட்டு மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்படும். இதைதொடர்ந்து அங்குள்ள ஸ்ட்ராங்ரூமில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் ஸ்ட்ராங்ரூம் அமைக் கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப் பட்டுள்ள கிளாஸ்டோன் புஷ்பராஜ் மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வாக்குகள் எண்ணும் மையங்கள் மற்றும் ஸ்ட்ராங்ரூம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள், முகவர்கள் வந்து செல்லும் வழிகள், ஸ்டாரங் ரூம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தியபின்னர் தேர்தல் அமைதியான முறையில் நடத்துவது குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுரைகளை வழங்கினார்.
முன்னதாக பிக்கட்டி பேரூராட்சி அலுவலகத் திற்கு சென்று வாக்கு பதிவு தினத்தன்று பயன்படுத்தப் படும் பொருட்கள் தயார் செய்யும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கீழ்குந்தா பேரூராட்சி தேர்தல் அலுவலர் ரவிக்குமார், குந்தா தாசில்தார் இந்திரா, கிராமநிர்வாக அலுவலர் லதா உள்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.
Next Story






