என் மலர்
நீலகிரி
- 144 தொகுப்பு வீடுகளை அமைச்சா் ராமசந்திரன் திறந்துவைத்தாா்.
- ராயல் என்பீல்டு நேட்டிவ் கோ் அறக்கட்டளை சாா்பில் திடக்கழிவு மேலாண்மை திட்ட அறிவிப்பு பலகையை திறந்துவைத்தாா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மசினகுடி ஊராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பில் மின்விளக்குகளுடன் மறுசீரமைப்பு செய்யப்பட்ட 144 தொகுப்பு வீடுகளை அமைச்சா் ராமசந்திரன் திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து, ராயல் என்பீல்டு நேட்டிவ் கோ் அறக்கட்டளை சாா்பில் திடக்கழிவு மேலாண்மை திட்ட அறிவிப்பு பலகையை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஜெயராமன், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரி ராஜீவ் சா்மா, கூடலூா் நகராட்சித் தலைவா் பரிமளா, ஊராட்சிகளின் திட்ட இயக்குநா் சம்பத்குமாா், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் அருண், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், அண்ணாதுரை, மசினகுடி ஊராட்சித் தலைவா் மாதவி, துணைத் தலைவா் நாகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, நகர செயலாளா் இளஞ்செழியன், ஒன்றிய செயலாளா் லியாகத் அலி, ஓவேலி பேரூா் செயலாளா் செல்வரத்தினம், ஓவேலி பேரூராட்சி மன்ற தலைவா் சித்ராதேவி உள்பட பலர் கலந்து கொண்டனா்.
- உலகத்திலேயே 50 ஆண்டு காலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்த வரலாறு யாருக்கும் கிடையாது
- பா.ஜ.க அரசு இந்தியை திணிப்பதில் யாரையும், எதையும், பொருட்படுத்தாமல் அதன் போக்கில் செல்கிறது.
குன்னூர்,
நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் இந்தி திணிப்பு தீர்மான விளக்க பொ துக்கூட்டம் குன்னூர் வி.பி.தெருவில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகத்திலேயே 50 ஆண்டு காலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்த வரலாறு யாருக்கும் கிடையாது. ஆனால் ஒரு கட்சியில் 50 ஆண்டுகாலம் தலைவராக இருந்தவர் கலைஞர் மட்டுமே. அப்படிபட்ட மகத்தான ஜாம்பவானாக திகழ்ந்த கலைஞர் மிசாவில் இருந்து கட்சியை காப்பாற்றியதுடன், 13 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்.
இன்னொரு முறை தமிழ்நாட்டில் தி.மு.க போன்றதொரு ஒரு கட்சி உருவாக முடியாது. வரும் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தின் ஆளுமையில் தி.மு.க. மட்டுமே இருக்கும்.மற்ற கட்சிகள் தமிழ்நாட்டில் பெயரளவில் மட்டுமே செயல்படும். இத்தகைய வரலாற்று மிக்க தி.மு.க.வை பாதுகாக்க வேண்டும் என்றால் கட்சியின் கொள்கைகளை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.
எனவே இளம் சமுதாயத்தினர் மத்தியில் தி.மு.க.வி zன் தியாக வரலாற்றை எடுத்து கூறி அவர்களுக்கும் அதனை கற்று கொடுக்க வேண்டும் .
யார் மத்தியில் ஆட்சி அமைத்தாலும் இந்தியை திணிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பா.ஜ.க அரசு இந்தியை திணிப்பதில் யாரையும், எதையும், பொருட்படுத்தாமல் அதன் போக்கில் செல்கிறது.இவர்களை வளரவிட்டால் பேராபத்து காத்து இருக்கிறது. இதில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, மாவ ட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, கே.எம்.ராஜூ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, அவைத்தலைவர் போஜன், மாநில சிறுபான்மை துணை அமைப்பாளர் அன்வர்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எதிர்கால மருந்துகள் ஆராய்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஜே.எஸ் .எஸ் பார்மசி கல்லூரியில் எதிர்கால மருந்துகள் ஆராய்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஜே.எஸ்.எஸ் கல்லூரியின் முதல்வர் தனபால் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மருந்தாக்கியல் துறை தலைவர் கவுதமராஜன் கருத்தரங்கம் குறித்து மற்றும் அதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.
பேராசிரியர் சின்னச்சாமி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். இதில் டாக்டர் மோனிகா, மெடோபார்ம் பிரைவேட், லிமிடெட் தலைமை அதிகாரி, சபாபதி, ஜே.எஸ்.எஸ் ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி குழுமத்தின் துணை தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர். மதுசூதன் புரோகித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மருந்தாக்கியல் துறை கல்லூரி ஆசிரியர்கள் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பஞ்சாப் லவ்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நன்றி கூறினார்.
- சாலை ஓரத்தில் 2 மாதத்திற்கு முன்பாக கழிவுநீர் இணைப்புக்காக குழி தோண்டப்பட்டது.
- சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி 21-வது வார்டில் மெயின் பஜார் சாலை ஓரத்தில் 2 மாதத்திற்கு முன்பாக கழிவுநீர் இணைப்புக்காக குழி தோண்டப்பட்டது. சாலை இணைப்பு கொடுத்த பின்பும் குழிகள் மூடப்படாத நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர், அது மட்டுமல்லாமல் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
- தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி வாலிபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
- என்ன காரணத்துக்காக தற்கொலை செய்துகொண்டார் என விசாரித்து வருகின்றனர்.
கூடலூர்
கூடலூர் அப்துல் கலாம் நகர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வாலிபர் ஒருவர் திடீரென குதித்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கூடலூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி வாலிபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.ஆனால் நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தகவல் அறிந்த கூடலூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த காம நாதன் மகன் பாலா (வயது 34) என்ற கூலித்தொழிலாளி என தெரிய வந்தது.
மேலும் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்துகொண்டார் என தெரியவில்லை. பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் கூடலூர் அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும் சோகமும் ஏற்பட்டது.
- குப்பைகளை சேகரிக்கும் பணியில் 123 நிரந்தரப் பணியாளா்கள், 163 ஒப்பந்தப் பணியாளா்கள் ஈடுபட்டு வந்தனா்.
- கடந்த 31ம் தேதியுடன் தற்காலிக துப்புரவுப் பணியாளா்களுக்கான ஒப்பந்தம் முடிவடைந்தது.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களால் தினசரி சுமாா் 32 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகளை சேகரிக்கும் பணியில் 123 நிரந்தரப் பணியாளா்கள், 163 ஒப்பந்தப் பணியாளா்கள் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில் கடந்த 31ம் தேதியுடன் தற்காலிக துப்புரவுப் பணியாளா்களுக்கான ஒப்பந்தம் முடிவடைந்தது. இதனால், நிரந்தரப் பணியாளா்களை கொண்டு சுகாதாரத் துறையினா் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். ஆனாலும், நகரில் மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.
தற்போது மழையும் பெய்து வருவதால் குப்பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியும் அதிகமாக உள்ளது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வழக்கமாக ஒப்பந்தப் பணியாளா்களின் பணிக் காலம் முடிந்தவுடன், அவா்களது ஒப்பந்தம் தனியாா் ஒப்பந்ததாரா்கள் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்படும்.
ஆனால், தற்போது நிரந்தர தூய்மைப் பணியாளா்களை அலுவலக பணிகளுக்கு மாற்றம் செய்துவிட்டு மொத்தமாக இருக்கும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியிடங்களை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, இந்தப் பணிகளுக்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிய 2 மாதம் ஆகும் என தெரிகிறது என்றனர்.
- நீரோடைகள், அணைகள் ஆகிய பகுதிகளில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என வருவாய்த் துறையினா் அளவீடு செய்து வருகின்றனா்.
- அரசுக்கு சொந்தமான 1.60 ஏக்கர் நிலத்தை மீட்டு வருவா ய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா் ஆகிய வருவாய் கோட்டங்களில் கால்வாய்கள், நீரோடைகள், அணைகள் ஆகிய பகுதிகளில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என வருவாய்த் துறையினா் அளவீடு செய்து வருகின்றனா்.
இந்த நிலையில் குன்னூர் டென்ட்ஹில் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான 1.60 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து தேயிலை பயிரிட்டு இருப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன் மதிப்பு ரூ.20 கோடி ஆகும். இதைத்தொடர்ந்து கலெக்டர் அம்ரித் உத்தரவின்பேரில் குன்னூர் தாசில்தார் சிவக்கு மார் தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆக்கிரமிப்பு நிலத்தில் விவசாய பணிகள் ஏதும் மேற்கொள்ளக் கூடாது எனவும், அதில் இருந்து வெளியேறுமாறும் வருவாய்த்துறை சாா்பில் நோட்டீஸ் மற்றும் தடுப்புகள் வைத்து அறிவிப்பு செய்யப்பட்டது.
பின்னர் அரசுக்கு சொந்தமான 1.60 ஏக்கர் நிலத்தை மீட்டு வருவா ய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.மேலும் அரசு நிலங்களை ஆக்கிரமி ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி க்கொள்ள வேண்டும் என்றனர்.
- கோத்தகிரியில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
- மண் சரிவுகள் ஏற்பட்டு சாலையில் மரங்களும் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையினால் பல பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலையில் மரங்களும் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் கோத்தகிரி சேட்லைன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு மண் சரிவு ஏற்பட்டு அருகில் இருந்த வீட்டின் சிமெண்ட் கூரையும் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இது போன்ற பாதிப்புகள் பல பகுதிகளில் ஏற்பட்டு வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.
- சாலை மற்றும் நடை பாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 50 கடைகளை அகற்றினர்.
- பாரபட்சம் தொடரும் பட்சத்தில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் அனுமதியுடன் மாபெரும் போராட்டம் நடக்கும்.
ஊட்டி,
ஊட்டியில் சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதைதொடர்ந்து நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் மற்றும் வருவாய்த்துறையினர் ஆலோசனை மேற்கொ ண்டனர்.நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் மீனாட்சி தலைமையிலான நகராட்சி பணியாளர்கள் காபிஹவுஸ் பகுதி, மாரியம்மன் கோவில் முதல் பஸ் நிலையம் வரை சாலை மற்றும் நடை பாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 50 கடைகளை அகற்றினர்.
இந்த நிலையில் நடைபா தைகளை ஆக்கிரமித்து இருந்ததாக கூறி அ.தி.மு.கவினர் நடத்தி வரக்கூ டிய கடைகளை மட்டுமே அகற்றியுள்ளதாக அ.தி.மு.கவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.இது தொடர்பாக அ.தி.மு .க மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம்பாபு , பொதுகுழு உறுப்பினர் வழக்கறிஞர் தேவராஜ், அன்பு செல்வன் ஆகியோர் ஊட்டி நகரா ட்சி ஆணையாளர் காந்திராஜனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
பின்னர் பேசிய அ.தி.மு.க மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆக்கிர மிப்புகள் அகற்றபடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அ.தி.மு.க.வி னரின் கடைகள் மட்டு மே அகற்றபடுகிறது. எ னவே பாராபட்சமின்றி அனைத்து கடைகளையும் அகற்று வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரா பட்சம் தொடரும் பட்சத்தில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் அனுமதியுடன் மாபெரும் போராட்ட த்தை முன்னெடுக்கும் என்றார்.
- ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஏரியில் படகு சவாரி செய்து மகிழந்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகினையும், சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கணிசமாக காணப்படும். வார இறுதி நாட்களில் இந்த கூட்டம் மேலும் அதிகரிக்கும்.தற்போது வார விடுமுறை தினங்க ளான சனி மற்றும் ஞாயிற்று க்கிழமை யையொட்டி நீலகிரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் குவிந்து பூக்கள் மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர்.
ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே ஊட்டி ஏரியில் படகு இல்லம் அமைந்துள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். நேற்று ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
அவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஏரியில் படகு சவாரி செய்து மகிழந்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டி சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்ததுடன் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
- சிலுவையின் கீழ் வைக்கப்பட்ட பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் தேங்கி இருந்தது.
- குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அந்தநபரின் வீட்டில் குவிந்தனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது பாரத் நகர். இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவர் தனது வீட்டில் இயேசு சிலுவை ஒன்றை சுவற்றின் மீது மாட்டி வைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி இவரது வீட்டின் சுவர் முழுவதும் எண்ணெயாக காணப்பட்டது. எப்படி இங்கு எண்ணெய் வந்தது. யாரும் சுவற்றில் எண்ணெயை தடவாதபோது இது எப்படி என யோசித்தார்.
தொடர்ந்து வீட்டில் மாட்டியிருந்த இயேசு சிலுவையை உற்று நோக்கினார். அப்போது சிலுவையில் இருந்து தேங்காய் எண்ணெய் வழிந்ததாக தெரிகிறது. இதனை கண்டதும் ஆச்சரியம் அடைந்தார்.
உடனே சிலுவையின் கீழ் ஒரு பாத்திரத்தை வைத்துள்ளார். பின்னர் மறுநாள் பார்த்தபோது அந்த சிலுவையின் கீழ் வைக்கப்பட்ட பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் தேங்கி இருந்தது. இதனால் அவருக்கு, ஆச்சரியமும் உண்டானது.
இதற்கிடையே இயேசு உருவத்தில் இருந்து தேங்காய் எண்ணெய் வடிந்த தகவல் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதி முழுவதும் வேகமாக பரவியது.
இதையடுத்து குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அந்தநபரின் வீட்டில் குவிந்தனர். அவர்கள் தேங்காய் எண்ணெய் வடிந்த இயேசு சிலுவை உருவத்தை அதிசயத்துடன் பரவசத்துடன் வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து செல்லும்போது தேங்காய் எண்ணெயும் வாங்கி சென்றனர்.
- நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
- காட்டெருமை உணவு தேடி வீட்டின் கதவுகளை வந்து தட்டுகின்றன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
காட்டெருமைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தேயிலை தோட்டங்களில் சுற்றி திரிந்து வருகின்றன. சில நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் சர்வசாதராணமாக நடமாடி வருகின்றன. இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே உள்ளனர்.
இந்த நிலையில் காட்டெருமை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி உணவு தேடி குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பகுதிக்கு வந்தது. குடியிருப்பு பகுதிக்குள் சென்ற காட்டெருமை அங்குள்ள ஒரு வீட்டின் அருகே சென்றது.
வீட்டின் அருகே சென்றதும், காட்டெருமை வீட்டின் கதவை தட்டியது. வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது வாசலில் காட்டெருமை நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர்.
இருப்பினும் காட்டெருமைக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். சில நிமிடங்களில் காட்டெருமை அங்கிருந்து சென்று விட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,
கடந்த சில நாட்களாக இங்கு ஒரு காட்டெருமை சுற்றி திரிகிறது. சில நேரங்களில் அந்த காட்டெருமை உணவு தேடி வீட்டின் கதவுகளை வந்து தட்டுகின்றன. உணவு கொடுத்தால் அதனை சாப்பிட்டு விட்டு சென்று விடுகின்றன.
இது சாதாரணமாக தெரிந்தாலும், சில நேரங்களில் காட்டெருமையின் தாக்குதலுக்கு ஆளாகலாம். எனவே அந்த காட்டெருமையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






